தர்பூசணி சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை?
கோடை வந்ததும் தர்பூசணி சீசன். கோடையை சமாளிக்க நீர்ச்சத்தி மிகுந்த பழங்களை சாப்பிடுவது நல்லது.
உடலில் நீர்ச்சத்து குறைப்பாடு ஏற்படாமல் இருக்க இது உதவும்.
தர்பூசணி இரும்புச்சத்து நிறைந்தது. இதனுடன் இளநீர் சேர்த்தும் சாப்பிடலாம்
உடலில் உடனடியாக எனர்ஜி இடைக்க தர்பூசணி உதவும்.பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஏ, உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
தர்பூசணியில் உள்ள lycopene கண்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தர்பூசணியை ஜூஸ் ஆக குடிப்பதை விட பழமாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிட கூடாதாம்.
ப்ரேக் டைம் ஸ்நாக்சாக தர்பூசணியை பயன்படுத்தலாம். எண்ணெய் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை விட பழங்கள் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
தர்பூசணியில் குறைந்த அளளே நார்ச்சத்து இருக்கிறது. அதோடு, இனிப்பும் அதிகமாகும்.
தர்பூசணியை இரவு நேரத்திலோ அல்லது மாலை 5 மணி மேல் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.