கணவரை கண்டுக்காத கீர்த்தி சுரேஷ்.. அந்த நடிகர் வீட்டில் இருக்க விருப்பமாம்.. ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது கணவரை தாண்டி பிரபல நடிகரை பற்றி பேசியதை கேட்டு ரசிகர்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா போன்ற படங்களில் நடித்தார். ஆனால், மகாநடி திரைப்படம் அவரது நடிப்புக்கு தீனி போட்டம் படம் என்றே கூறலாம். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலம் அடைந்தார். இதுபோன்ற சவாலான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தாலும், அவ்வப்போது கமர்ஷியல் படங்களிலும் தலைகாட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ஷோலோ ஹீரோயின் வேடம்
நடிகர்களுடன் டூயட், காதல் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் படங்களில் நடித்தாலும், தனக்கான முத்திரையை பதிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து ஷோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ரகு தாத்தா நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோன்று தமிழை தாண்டி இந்தி படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கு வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த த்ரில்லர் கதையாக அது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான Uppu Kappurambu வெப் தொடரின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம்
தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தொட்டிலை கடந்தாண்டு இருமத முறைப்படி கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். சண்டைக்கோழி 2 படத்தில் நடித்தபோது விஷாலுக்கு பெண் கேட்டு சென்றதாகவும் ஆனால், அவர் லிவிங் உறவில் நண்பரை காதலித்து வந்தது தெரியவந்தது என இயக்குநர் லிங்குசாமி கூறியது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி ரிவால்வர் ரிட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்றுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நானி வீட்டில் இருக்க விருப்பம்
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "உப்பு கப்புராம்பு" வெப்தொடரின் புரோமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது செய்தியாளர் ஒருவர் மீண்டும் கொரோனா வந்தால் யாருடன் தங்க விரும்புவீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், நடிகர் நானி, அவரது மகன் ஜூன்னு மற்றும் அவரது மனைவி அஞ்சு ஆகியோருடன் இருக்க விரும்புவேன். அங்கு இருந்தால் நேரம் போவது தெரியாது. மனம் நிம்மதியாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த சிலர் காதல் கணவரை கலட்டி விட்டீங்களே மேடம். இப்படி சொல்வீங்கனு எதிர்பார்க்கலை. பாவம் உங்க கணவர் என கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
நண்பர்கள்
நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்தபோதே இருவரும் குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர். சமீபத்தில் அளித்த பேட்டிகளில் கூட கீர்த்தி சுரேஷ் நானியின் மகனை பற்றி பேசியது வைரலானது. நானியும் கீர்த்தியும் சேர்ந்து பேட்டி கொடுக்கும் போது லூட்டி அடிப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகின. நானியும் சில பேட்டிகளில் கீர்த்தி சுரேஷ் எங்க வீட்டுக்கு வந்தா என் பையன் ஆண்டி ஆண்டி சொல்லி சேட்டைகள் செய்வான் என தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















