தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா?
சிலருக்கு,தலையணை இல்லாமல் தூங்குவது இயலாத ஒன்று. சிலர் சற்று உயரமான தலையணை கூட பயன்படுத்துவார்கள். அது ஆரோக்கியமானதா?
’படுக்கையில் எப்படியாவது 4 தலையணையாச்சும் வேணும் எனக்கு’ என்று சொல்பரும் உண்டு. காலுக்கு ஒன்று, கட்டியணைத்து தூங்க ஒன்று என்று தலையணை தேவைப்படுவோரும் இருக்கிறார்கள்.
உயரமான தலையணை பயன்படுத்துவது சிறந்தது இல்லை என்கிறார்கள். தண்டுவடம் பாதிக்க வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறார்கள்.
எலும்பு, முதுகு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தலையணை இல்லாமல் தூங்குவது சிறந்தது.
தலையணை வைத்து தூங்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்திருப்பார்கள் அவர்கள் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும் அவர்கள் பரிந்துரைக்கும் மெலிதான தலையணையை பயன்படுத்துவது நல்லது.
தலையணை இல்லாமல் தூங்கும்போது உடல் சீரான இயற்கையான நிலையில் இருக்கும்.
தலையணைகள் இளவம்பஞ்சு வைத்து தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
தலையணை பயன்படுத்தாமல் தூங்குவதையே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தூக்க பிரச்சனைகள் ஏற்பட்டால் தலையணையில் கவனம் செலுத்த வேண்டும்.