Watch Video: திருமணமான 15 நாளில் நடிகைக்கு கால் முறிவு: ஆனாலும் க்யூட் நடனம்!
நடிகை அங்கிதா லோகண்டே கால் முறிவுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டேவுக்கு அவரது காதலர் விக்கி ஜெயினுடன் கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் அவரது தோழி அஷிதா தவான் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கிதா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அங்கிதா காலில் கட்டு போடப்பட்ட நிலையில் கையில் ஸ்டிக்குடன் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார்.
View this post on Instagram
1996ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான ராஜா ஹிந்துஸ்தானி என்ற படத்தில் இடம்பெற்ற பர்தேசி பர்தேசி என்ற பாடலுக்குத்தான் அவர் நடனமாடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















