Ammu Abhirami: அம்மு அபிராமி குக்கு வித் கோமாளி பிரபலத்தைக் காதலிக்கிறாரா.. வைரலாகும் பதிவு!
Actress Ammu Abhirami: குக்கு வித் கோமாளி பிரபலத்தை நடிகை அம்மு அபிராமி காதலித்து வருவதாக தொலைக்காட்சி, இணைய வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

தனது பிறந்தநாளன்று நடிகை அம்மு அமிராமி (Ammu Abhirami) பகிர்ந்த பதிவைத் தொடர்ந்து அவரது காதல் வாழ்க்கை குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ளன.
அம்மு அபிராமி
ராட்சசன் , அசுரன் உள்ளிட்ட படங்களின் வழியாக பிரபலமானவர் நடிகை அம்மு அமிராமி. கடந்த 2022ஆம் ஆண்டு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மு அபிராமி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டு வெளியான கண்ணகி படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பைரவா, யானை, தம்பி, அடவி, நவரசா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ள அம்மு அபிராமி குறைந்த காலத்தில் பிரபலமாகியவர்.
பிறந்தநாள் பதிவால் எழுந்த சந்தேகம்
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் அம்மு அபிராமி கொண்டாடினார். அப்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபன் அம்மு அபிராமியின் புகைப்படத்தைப் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தப் பதிவில், அம்மு அபிராமி ஸ்பெஷல் அன்புடன் ரிப்ளை செய்ய, ஷிவாங்கி, ரித்திகா ஆகியோர் ஜாலியாகவும் இதயங்களைப் பகிர்ந்தும் கமெண்ட செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்களுக்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் அம்மு அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர் , ஜனனி ஐயர், கலையரசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.
மேலும் படிக்க :TVK Vijay: ஈஸ்டர் தினத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் தழைக்கட்டும் - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

