Karthigai Deepam: அபிராமி குறித்து வந்த தகவல்.. காஞ்சிபுரம் கிளம்பும் கார்த்தி.. கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!
மீனாட்சிக்கு இன்னும் கோபம் அடங்காமல் இருக்க, ரியா தனியாக சிக்க அவளையும் போட்டு வெளுத்தெடுக்க, இதைப் பார்க்கும் தீபா மீனாட்சியை கூட்டிச் சென்று விடுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி காஞ்சிபுரம் கோயிலில் இருக்க, ஐஸ்வர்யா அபிராமியை தீர்த்து கட்ட முடிவெடுத்த நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் .
அதாவது மீனாட்சி ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரியின் முகத்தை மூடி அடி வெளுத்தெடுத்து அனுப்ப, அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி “தீபாவும் மைதிலியும் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு” என்று சொல்ல, ஐஸ்வர்யா “அவங்க ஏன் அப்படி பண்ணனும்” என்று சொல்கிறாள்.
மீனாட்சிக்கு இன்னும் கோபம் அடங்காமல் இருக்க, ரியா தனியாக சிக்க அவளையும் போட்டு வெளுத்தெடுக்க இதைப் பார்க்கும் தீபா மீனாட்சியை கூட்டிச் சென்று விடுகிறாள். மறுபக்கம் அபிராமி கோயிலை சுத்தம் செய்து கொண்டிருக்க, அதைப் பார்த்து பூசாரி “உங்களுக்கு என்னமா பிரச்சனை சொல்லுங்க, தீர்த்து வைக்க முயற்சி செய்யுறேன்” என்று சொல்கிறார். ஆனால் அபிராமி “நீங்க தங்க இடம் கொடுத்ததே போதும்” என்று சொல்கிறார்.
பிறகு ஐஸ்வர்யாவும் ரியாவும் ரவுடி ஒருவனுக்கு பணத்தை கொடுத்து நாங்க சொல்லும் போது அபிராமி கதையை முடிச்சிடு என்று சொல்கின்றனர். எதுக்கு வெய்ட் பண்ணனும் கோவிலில் வைத்தே கொன்னுடுறேனன் என்று ரவுடி சொல்ல ஐஸ்வர்யா கோவில் வைத்து பண்ணா பெரிய பிரச்சனையாகும் என்று சொல்லி விடுகிறாள்.
இதனையடுத்து தீபா அபிராமிக்காக வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்குச் செல்வதாக கார்த்தியிடம் சொல்ல, அவன் “அம்மா மனசு வருத்தத்தில் இருந்தா ஒரு கோயிலுக்கு போவாங்க அந்தக் கோயில் தெரியுமா?” என்று கேக்க, தீபா தெரியாமல் முழிக்க மீனாட்சியிடம் கேட்க அவளும் தெரியாமல் முழிக்கிறாள். பிறகு தீபா, மீனாட்சி மைதிலி ஆகியோர் கோயிலுக்கு கிளம்பி வருகின்றனர். தீபா அங்கப்ரசாதனம் செய்து கொண்டிருக்கிறாள்.
அபிராமியை கோயிலில் பார்க்கும் துப்புரவு பணியாளர் ராணிக்கு தகவல் கொடுக்க ராணி கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் உடனடியாக கோயிலுக்கு கிளம்பிச் செல்கிறான். அதே போல் கோயிலில் மீனாட்சியைப் பார்த்த உறவினப்பெண் ஒருவரும் அபிராமியை காஞ்சிபுரம் கோயிலில் பார்த்ததாக சொல்ல, இவர்களும் காஞ்சிபுரத்துக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.