Jaibhim | படம் பார்த்து உறைந்து போன சூரி! படம் முழுக்க அழுத சித்தார்த்!
ஒரு முன்னணி நடிகரால் சிறந்த படத்தை உருவாக்கவும் முடியும் என்பதற்கு இதுவே சான்று
சூர்யா நடிப்பில் ,ஞானவேல் ராஜா எழுத்து மற்றும் இயக்கத்தில் பவர்ஃபுல்லாக வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’ சமூக வலைத்தளங்களை திறந்தாலே படத்தின் மீதான நேர்மறை விமர்சனங்களையும் , கொண்டாட்டங்களையும் பார்க்க முடிகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் ராஜு முருகன் , பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் படத்தை பாராட்டியுள்ளார். இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் எதார்த்தமாக படம் குறித்த பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்“இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை. #JaiBhim” என குறிப்பிட்டுள்ளார்
இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim pic.twitter.com/9nAGJGCOje
— Actor Soori (@sooriofficial) November 3, 2021
இதே போல படத்தை பார்த்த நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார் அதில் “ படம் முழுக்க அழுதேன். இதயம் வலித்தது.. குற்ற உணர்வுடன் வெட்கப்படுகிறேன். இப்படியான படத்தை தயாரித்த சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி ! ஒரு முன்னணி நடிகரால் சிறந்த படத்தை உருவாக்கவும் முடியும் என்பதற்கு இதுவே சான்று” என குறிப்பிட்டுள்ளார்.
I wept throughout #JaiBhim. My heart was in pain. I felt guilty and ashamed. Hats off to Jyo and @Suriya_offl for producing this picture. Suriya has shown how a top star can make a great film that is not about only them.
— Siddharth (@Actor_Siddharth) November 3, 2021
இதே போல பலரும் தங்களின் உணர்வுகளையெல்லாம் திரட்டி, ஜெய் பீம் படம் குறித்தான தங்கள் பார்வைகளை பொது வெளியில் பதிவிடுகின்றனர். இது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.