FIR Movie | OTT-இல் வெளியாகிறதா FIR? விஷ்ணு விஷால் விளக்கம்
பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் FIR திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தலத்தில் வெளியாகும் என்று நேற்று தகவல் வெளியானது.
அண்மைக்காலமாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக இணைய வழியில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று தொடங்கி தற்போது வெளியாகவிருக்கும் தனுஷின் ஜகமே தந்திரம் வரை, பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக OTT தலத்தில் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள FIR திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்று கூறிய நிலையில் அது பொய்யான தகவல் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
விவி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பிரபல நடிகர் விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரீபா மோனிகா ஜான் மற்றும் ரைசா வில்லன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அஸ்வந்த் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு இந்த படம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து இதர பணிகள் தொடங்கியது.
**Confirmed**
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 29, 2021
News regarding Vishnu’s #FIR direct OTT release is NOT True.#Rumour pic.twitter.com/hm95Aa54T7
மேலும் இந்த படத்தில் இருந்து 'விழியிலே' என்ற முதல் சிங்கள் ட்ராக் பாடலும் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ட்ரைலர் சென்ற ஆண்டே வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உயர் பதவியில் இருந்த போலீஸ் அதிகாரி ரமேஷ் குடாவ்லா என்பவற்றின் மகன்தான் பிரபல நடிகர் விஷால் குடாவ்லா. திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த விஷால் சென்னையில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்ட அவர் TNCA லீக் போட்டிகளில் விளையாடினர். ஆனால் காலில் ஏற்பட்ட காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர் விஷ்ணு என்ற பெயர் மாற்றத்துடன் தனது கலைப்பயணத்தை தொடங்கினர்.
63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்!
2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கினர். முதல் படத்திலேயே அறிமுக நடிகருக்கான எடிசன் விருதினை பெற்றார். தொடர்ச்சியாக பலே பாண்டியா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற பல திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் பட்டியலில் இணைந்தார் விஷ்ணு விஷால்.
அதன் பிறகு 2016ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் விஷ்ணு ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கினர். அதன் பிறகு கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்து நடித்தார். தற்போது வெளியீட்டுக்காக கத்திற்கும் FIR திரைப்படத்தையும் விஷ்ணு தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.