TripAdvisor எனும் பயண வழிகாட்டல் இணையதளம் ’TripAdvisor's Travelers' Choice Awards for 2025’-ன் முடிவுகளை வெளியிட்டது.
நூறு கோடி மக்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைத்தே முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக உலகின் சிறந்த கலாச்சார சுற்றுலா தளங்களின் லிஸ்ட் வெளியானது.
உலகம் முழுதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் கலை மற்றும் பாரம்பரியம் கொண்ட இடங்களே இப்பட்டியலில் இடம்பெறும் என்று TripAdvisor தெரிவித்தது.
அதில் புது டெல்லி 8வது இடத்தை பிடித்திருக்கிறது. டாப் 10-ல் இடம் பிடித்த ஒரே இந்திய பகுதி இதுவே ஆகும்.
TripAdvisor டெல்லியின் சாந்தினி சவுக் மார்கெட், ஹௌஸ் காஸ் கிராமம், லோதி காலனி போன்ற இடங்களை குறிப்பிட்டு, வண்ணங்களும் குழப்பமும் நிறைந்த இடம் என்று கூறியுள்ளது.
மேலும், இந்தியாவின் தலைநகர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் நம்பமுடியாத வரலாற்று பக்கங்களால் நிறப்பப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.