Ponniyin Selvan Teaser Launch: அப்ப எனக்கு தமிழ் மூணாவது மொழிதான்.. தாத்தா திட்டிட்டாரு.. உண்மையை உடைத்த விக்ரம் பிரபு..!
பொன்னியின் செல்வனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி நடிகர் விக்ரம் பிரபு பகிர்ந்த சுவாரசிய கதையை இங்கு பார்க்கலாம்.
பொன்னியின் செல்வனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி நடிகர் விக்ரம் பிரபு மேடையில் பகிர்ந்த சுவாரசிய கதையை இங்கு பார்க்கலாம்.
இது குறித்து நடிகர் விக்ரம் பிரபு பேசும் போது, “ இங்க நிக்கிறது கிஃப்ட்டுன்னு நினைக்கிறேன். மணி சாரோட படத்துல இருக்கனும்ணு அப்படிங்கிற ஆசையோடதான் சினிமா துறைக்குள்ள வந்தேன். நான் முதல்ல மீட் பண்ணது மணி சாரத்தான். அவர்ட்ட ஆசீர்வாதம் வாங்குனேன்.
இதுதான் நிறைய நடிகர்கள் நடிச்ச முதல் இந்தியன் படம் அப்படின்னு சொல்லுவேன். இரண்டு மூணு பேர் நடிக்கிறதுக்கு பேரு மல்டி ஸ்டார் படம் கிடையாது. பொன்னியின் செல்வன் மாதிரியான படத்துல இத்தன பேரு நடிக்கிறதுக்கு பேருதான் மல்டி ஸ்டார் படம். படத்துல 30 பேரு இருக்காங்க..
தமிழ் மூன்றாவது மொழி
ஒரு நாள் எங்க தாத்தா ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை போய் எடுத்துட்டு வா சொன்னாரு.. நான் அப்பத்தான் தமிழ் கத்துக்கிட்டு இருந்தேன்.. பள்ளியில் தமிழ் எனக்கு 3 rd லாங்குவேஜ்.. ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு புத்தகத்தை எடுத்துட்டு வந்து கொடுத்தேன். டேய் என்ன ஒரு புத்தகம்தான் இருக்கு.. 5 புத்தகம் இருக்கும் போய் எடுத்துட்டு வா... போடா.. என்றார். ”அப்படித்தான் எனக்கு பொன்னியின் செல்வன் ஞாபகம் இருக்கு.” என்று பேசினார்.
பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட்டுகள் இந்த வாரம் வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம், படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழா நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் மணிரத்னம், கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்