![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thalapathy 68: சத்தமே இல்லாமல் நடைபெற்ற சம்பவம்.. தளபதி 68 படத்திற்கு பூஜை போட்டாச்சு.. இணையும் பிரபலங்கள்..!
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இனிதே நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
![Thalapathy 68: சத்தமே இல்லாமல் நடைபெற்ற சம்பவம்.. தளபதி 68 படத்திற்கு பூஜை போட்டாச்சு.. இணையும் பிரபலங்கள்..! Actor Vijay's Thalapathy 68 movie pooja was held on today Thalapathy 68: சத்தமே இல்லாமல் நடைபெற்ற சம்பவம்.. தளபதி 68 படத்திற்கு பூஜை போட்டாச்சு.. இணையும் பிரபலங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/43b7da588d336db45551cbffb7def0531696230812440572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இனிதே நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடைசியாக நடப்பாண்டு பொங்கல் அன்று வாரிசு படம் வெளியாகியது. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தை தொடந்து அவரது நடிப்பில் அடுத்ததாக “லியோ” படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் என பலரும் நடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி இந்நிகழ்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகமடைந்தனர். மேலும் இதற்கு காரணம் அரசியல் அழுத்தம் தான் என்ற விமர்சனமும் கடுமையாக முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களை சமாதானப்படுத்த லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த வாரம் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Thalapathy68 Team had formally done a POOJA At Prasad Studio Today Morn 7AM !😳🔥
— கரிகால சோழன் 💯 (@karikalan1412) October 2, 2023
Below PiCS Taken During #Leo & #Bigil Pooja Ceremonies🔥💥@archanakalpathi @actorvijay @vp_offl pic.twitter.com/E0QaBGihJG
இப்படியான நிலையில் விஜய்யின் 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிகில் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்நிறுவனத்திற்காக அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். இதனால் ரசிகர்களின் 13 ஆண்டு கால ஏக்கம் நிறைவடைந்துள்ளது. தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோரோடு நடிகர் மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் தளபதி 68 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் பிரபுதேவா லைலா, மீனாட்சி சௌத்ரி, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் படப்பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நாளை (அக்டோபர் 3) தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: "எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும்” .. ஓபனாக பேசிய பிரதீப் ஆண்டனி.. அதிர்ந்த சக போட்டியாளர்கள்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)