Vijayakanth:மறைந்த அண்ணன் விஜயகாந்த் உடலை காண ஓடோடி வந்த விஜய்.. கண்ணீர் மல்க அஞ்சலி..
Vijayakanth: விஜயகாந்த் உடல் வைத்திருக்கும் கண்ணாடி பேழை மீது கை வைத்து உயிரற்ற அவரது உடலை பார்த்த விஜய் கண்ணீர் விட்டார்.
![Vijayakanth:மறைந்த அண்ணன் விஜயகாந்த் உடலை காண ஓடோடி வந்த விஜய்.. கண்ணீர் மல்க அஞ்சலி.. Actor vijay pays last respect to DMDK leader Vijayakanth Vijayakanth:மறைந்த அண்ணன் விஜயகாந்த் உடலை காண ஓடோடி வந்த விஜய்.. கண்ணீர் மல்க அஞ்சலி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/28/71c62c37b57b229e9ffb3f8b37c12c1b1703783829559102_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். விஜயகாந்த் உடல் வைத்திருக்கும் கண்ணாடி பேழை மீது கை வைத்து உயிரற்ற விஜயகாந்த் உடலை பார்த்த விஜய் கண்ணீர் விட்டார். சில வினாடிகளின் அஞ்சலிக்கு பிறகு பிரேமலதாவை பார்த்த விஜய் அவரது கரங்களை பிடித்து ஆறுதல் கூறினார்.
Clear Video 😭💔 @actorvijay#Vijayakanth #கேப்டன் #விஜயகாந்த்#RIPCaptainVijayakanth #RIPVijayakanth#Leo @actorvijay #Thalapathy68#Leo #Thalapathy68 #ThalapathyVijay
— Imi Imthiyasᴸᴱᴼ❤️ (@imi_hamad1) December 28, 2023
pic.twitter.com/pYG80TEQVD
நடிகர் விஜயகாந்த் உடன் சில படங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ‘செந்தூரப்பாண்டி’ படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். செந்தூரப்பாண்டி படத்தில் நடித்த பிறகு விஜய்யின் திரை வாழ்க்கை உச்சர்த்தை அடைய தொடங்கியது. விஜயகாந்த் மூலமே தனதுக்கு சினிமாவில் முன்னேற வாய்ப்பு கிடைத்ததாக நேர்க்காணல் ஒன்றில் விஜய் பேசி இருப்பார். விஜய்க்கு முன்னாடி, அவரது தந்தையும் இயக்குநருமாக எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்க்கு நல்ல நண்பர். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். இந்த சூழலில் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தார். விஜயகாந்தின் உடல் நாளை மாளை நல்லடக்கம் செய்ய உள்ள நிலையில், காலை 6 மணி முதல் நண்பர்கல் 1 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: Vijayakanth: விஜயகாந்த் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த நடிகர், நடிகைகள்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)