Vijayakanth: விஜயகாந்த் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த நடிகர், நடிகைகள்..
Vijayakanth: "விஜயகாந்த் மறைவு ஒவ்வொருவருக்கும் இதயத்தை நொறுக்கும் செய்தி, இன்று சிறந்த நடிகரையும், மனிதரையும் நாம் இழந்துள்ளோம்"
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அவருடன் 90களில் நடித்த நடிகைகள் சிம்ரன், ராதா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நல குறைவால் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்துடன் இணைந்து 90களில் நடித்த நடிகைகள் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளனர்.
90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதா வெளியிட்ட இரங்கல் பதிவில், “விஜயகாந்த் மறைவு ஒவ்வொருவருக்கும் இதயத்தை நொறுக்கும் செய்தி. அவருடன் பல படங்களில் நடித்தபோது ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பின்னர் அவருடைய மனைவியுடன் ஒரே குடும்பமான நட்பு ஏற்பட்டது. அவருடன் பணியாற்றியது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களாக இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்” என கூறியுள்ளார்.
View this post on Instagram
நடிகை சிம்ரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ என்னுடன் கண்ணுப்பட போகுதய்யா மற்றும் ரமணா படங்களில் இணைந்து நடித்த விஜயகாந்தின் மறைவு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. கேப்டர் விஜயகாந்த் சார் மறைந்து விட்டார். நீங்கள் எப்பொழுதும் எங்களது மனதில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the news of dearest co-star in Kannu Padapoguthu Ayya and Ramana movies, Captain Vijayakanth sir's passing.
— Simran (@SimranbaggaOffc) December 28, 2023
Rest In Peace Vijayakanth ji 💔 you will always live in our heart. Om Shanti 🙏 pic.twitter.com/olnfmRdESJ
இதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் பதிவில், “ இன்று சிறந்த நடிகரையும், மனிதரையும் நாம் இழந்துள்ளோம். அவரது அர்ப்பணிப்பான நடிப்பு மற்றும் இரக்க குணத்தால் நம் நினைவில் என்றும் இருப்பார்” என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நல பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார்.