Kannai Nambathe Trailer: ரிலீசானது உதயநிதியின் “கண்ணை நம்பாதே” ட்ரெய்லர்.. படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் கோலோச்சி வந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் இனி நடிக்கப்போவதில்லை எனவும் அவர் அறிவித்தார். இதனால் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுப்பதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக உள்ளார்.
அந்த வகையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கண்ணை நம்பாதே” படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ஆத்மிகா நடிக்கிறார். மேலும் பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பலரும் கண்ணை நம்பாதே படத்தில் இணைந்துள்ளனர். சித்துக்குமார் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
#KannaiNambathe trailer is out now - https://t.co/JW0tvu1NrI @Udhaystalin @mumaran1 @im_aathmika @Prasanna_actor @bhumikachawlat @Act_Srikanth @RedGiantMovies_ @Music_Siddhu @SubikshaOffl #JalandharVasan @Sanlokesh @lipicinecrafts @kalaignartv_off @saregamasouth @DoneChannel1 pic.twitter.com/BbmVhSbgCu
— Udhay (@Udhaystalin) February 26, 2023