மேலும் அறிய

நான் தவறு செய்துவிட்டேன்.. குடும்பத்தில் பல பிரச்னை.. ஜாமீன் கோரிய ஸ்ரீகாந்த்

Actor Srikanth: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், தான் செய்த தவறை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார்.

ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஸ்ரீகாந்த். இதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழில் முன்னணி நடிகராக முன்னேறினார். தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் நேற்று காலை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இதில் பல நடிகர்களும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

போதை பொருள் வந்தது எப்படி? 

ஆப்பிரிக்க இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 17ஆம் தேதி இரவு சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை நுங்கம்பாக்கம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள்இருந்தது தெரியவந்தது. 
அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.

போலீஸ் அதிரடி விசாரணை

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை இளைஞருக்கு போதைப்பொருள் விநியோகித்த  கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர். அந்த நபரை சென்னை அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். 

ஸ்ரீகாந்த் கைது

இதனைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது நான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என வாதம் செய்துள்ளார். பின்னர் அவரது ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். ஸ்ரீகாந்த் மட்டும் அல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

தவறை ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த் 

கைது நடவடிக்கையை தொடர்ந்து நடிகர்  ஸ்ரீகாந்த் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஜாமீன் கோரியுள்ளார். அதில், போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பல பிரச்னை உள்ளது. நான் வெளிநாடு செல்ல மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget