மேலும் அறிய

தெலுங்கில் மாஸ் காட்டும் குபேரா..காத்துவாங்கும் தமிழ் திரையரங்குகள்..ஒரே காரணம் தான்

தனுஷின் குபேரா திரைப்படம் தெலுங்கு மொழியில் சுப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் வசூலில் சரிவை சந்தித்துள்ளது

தெலுங்கில் மாஸ் காட்டும் குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. வாத்தி படத்தைத் தொடர்ந்து இரண்டு முறையாக தனுஷ்  தெலுங்கு இயக்குநரோடு பணியாற்றியுள்ளார். தனுஷின் வாத்தி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூலித்தது. இப்படம் தமிழ்நாட்டில் ரூ 35.20 கோடியும் ஆந்திரா மற்றும் தெலங்கான  மாநிலங்களில் ரூ 41.25 கோடியும் வசூலித்தது. தற்போது குபேரா திரைப்படமும் தமிழைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

குபேரா வசூல் 

குபேரா திரைப்படம் தெலுங்கில் இதுவரை ரூ 38.81 கோடியும் தமிழில் ரூ 15.25 கோடியும் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக குபேரா திரைப்படம் இதுவரை 80 கோடிவரை வசூலித்துள்ளது. தெலுங்கில் குபேரா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழ் நாட்டில் முதல் வாரத்திலேயே படத்தின் வசூல் சரிவை நோக்கி சென்று வருகிறது

தமிழ் ரசிகர்களுக்கு குபேரா வர்க் அவுட் ஆகாதது ஏன் ?

குபேரா படம் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் வர்க் அவுட் ஆகாதது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் . ஆனால் இந்த முறை குபேரா படம் அவர்களிடையே பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் முக்கியமான காரணமாக படத்தின் நீளம் கூறப்படுகிறது. குபேரா படத்தின் முழு நீளம் 3 மணி நேரம். இதற்கு முன்னதாக கார்த்தியின் மெய்யழகன் படத்தின் நீளமும் ஒரு பெரும் நெகட்டிவாக கூறப்பட்டது. இரண்டறை மணி நேரத்திற்கு கூடுதலாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டுவதில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

தமிழில் சமீபத்தில் வெளியான எந்த பெரிய பட்ஜெட் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருபதிபடுத்தவில்லை . கமலின் தக் லைஃப் , சூர்யாவின் ரெட்ரோ என இந்த வரிசை நீண்டு கொண்டே போகும். அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி , சூரியின் மாமன் ,  லப்பர் பந்து போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போதைய நிலைப்படி தமிழ் ரசிகர்கள் ஸ்டார்களின் படங்களைக் காட்டிலும் நல்ல கதையம்சம் கொண்ட சின்ன நடிகர்களின் படங்களையே அதிகம் ஆதரிக்கிறார்கள்.

தலைப்பு செய்திகள்

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget