திண்ணையில் கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை...வெறுப்பை காட்டிய ரசிருக்கு சூரி கொடுத்த நச் பதில்
எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூரியை திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்த வாழ்க்கை என பேசிய நெட்டிசனுக்கு சூரி கொடுத்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது

தனது உறவினர்களோடு சொந்த ஊரில் கட்டிய புதிய வீட்டில் நடிகர் சூரி இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வீடியோ வெளியிட்டார். இந்த பதிவில் கீழ் ரசிகர்கள் ஒருவர் சூரியை திட்டி கமெண்ட் பதிவிட்டிருந்தார். இதற்கு சூரி கொடுத்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சூரியை திட்டிய ரசிகர்
காமெடி நடிகராக இருந்து தற்போது நாயகனாக அவதாரமெடுத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார் நடிகர் சூரி. விடுதலை , கருடன் , மாமன் என சூரி நடித்த படங்கள் அடுத்தடுத்து கமர்சியல் வெற்றிபெற்றுள்ளன. பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. நாயகனாக நடிக்க தொடங்கியபின் அவர்மீது தேவையில்லாத விமர்சனங்களும் வெறுப்பும் சமூக வலைதளத்தில் காட்டப்படுகின்றன. அந்த வகையில் சூரியின் எக்ஸ் பக்கத்தில் அவரை தகாத முறையில் திட்டி ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அவருக்கு சூரி கொடுத்த பதில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது
சூரி கொடுத்த நச் பதில்
தீபாவளியை தனது சொந்த பந்தங்களுடன் கொண்டாடிய சூரி அதனை வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ் ஒருவர் "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு சூரி சற்றும் கோபப்படாமல் "திண்ணையில் இல்லை நண்பா பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் " என பதிலளித்துள்ளார்
திண்ணையில் இல்லை நண்பா 🙏
— Actor Soori (@sooriofficial) October 21, 2025
பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…
அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.
நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் 💐
சூரி நடிக்கும் மண்டாடி
சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். ஆர்.எஸ்.இன்ஃபொடெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ் , மஹிமா நம்பியார் , சஹாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை இயக்குகிறார். இராமநாதபுரம் - தூத்துக்குடி மீனவ சமூகத்தை மையக் கதைக்களமாக கொண்டு சுவாரஸ்யமான திரைப்படமாக உருவாகி வருகிறது மண்டாடி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் தொண்டி கடற்கரை பகுதியில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் பல லட்சம் மதிப்புள்ள படப்பிடிப்பு கருவிகள் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.





















