''4 வயது மகனுக்கு முத்தமிட்டா குத்தமா?’’ - நெட்டிசன்களை விளாசித்தள்ளிய விஜயலட்சுமி!
தனது நான்கு வயது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் மோசமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்
படப்பிடிப்பு, உடற்பயிற்சி, அவ்வபோது மீடியாவில் தலைக்காட்டுவது என இருந்த பிரபலங்களை கொரோனா ஊரடங்கு காலம் முழுமையாக மாற்றிவிட்டது. பலரும் சமூக வலைத்தளங்களிலேயே பாதி பொழுதினை கழித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சித்தார்த் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ். அவ்வபோது இவர் இடும் துணிச்சல் பதிவுகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு, இந்நிலையில் நேற்று மறைந்த பழம்பெரும் நடிகரான் ‘திலீப் குமாருக்கு’ ட்விட்டர் வாயிலாக அஞ்சலி செலுத்தியிருந்தார் நடிகர் சித்தார்த். அதில் திலீப் குமார் அவர்களின் இளம் வயது புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து “ மிகப்பெரிய மரம் இன்று சாய்ந்துவிட்டது. எனக்கு தெரிந்தவர்களில் தூய்மையான உள்ளம் படைத்தவர்களில் திலீப் குமார் ஒருவர், அவரது ஆத்மா நிம்மதி அடைய நான் வேண்டிக்கொள்கிறேன். கூடவே அவரிடம் இருந்து இன்றைய தலைமுறை நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்,அவரை எப்போதுமே கொண்டாட வேண்டும். ” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் உருக்கமான கமெண்டுகளை பதிவிட்டு வந்த நிலையில், யார் என அறியாத ரசிகர் ஒருவர் திலீப் குமாரின் புகைப்படத்தை பார்த்து “அக்ஷய் குமார் போல இருக்காரு “ என பதிவிட்டார். இதனை கண்ட சித்தார்த் காட்டமாக “ டேய் சாவடிச்சுடுவேன் ஓடிரு “ என பதில் கொடுத்துள்ளார்.
Dei. Saavadchiduven. Odidu. https://t.co/EYjdEV7QMR
— Siddharth (@Actor_Siddharth) July 7, 2021
இதே போல நடிகையும் இயக்குநர் அகத்தியன் அவர்களின் மகளுமான விஜயலட்சுமி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ் . இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி நேற்று கடற்கரையில் தனது நான்கு வயது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை கண்ட சிலர் “இது மேலைநாட்டு கலாச்சாரம் “ , “இவர் தமிழ் பெண்தானே!” என கமெண்ட் செய்ய ஆரமித்தனர். இன்னும் சிலரோ மோசமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி ட்விட்டரில் ”ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள்னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லாம் நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala” என காட்டமாக பதிவிட்டார். நடிகை விஜயலட்சுமி சென்னை 28 போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். சின்னத்திறையில் களமிறங்கிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக தான் நடித்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.