Actor Shree : "இவன் அவனா?"ன்னு கேட்டாங்க.. ஜாதி ரீதியாக அவமானம்.. எமோஷனலாக பேசிய நடிகர் ஸ்ரீ
Actor Shree : ஜாதி பெயரை சொல்லி தாழ்த்தி பேசி அவமானப்பட்டது பற்றி எமோஷனலாக பேசி இருந்தார் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ.
சின்னத்திரை நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்து வருகிறார்கள். அப்படி பல ஆண்டுகளாக ஏராளமான சின்னத்திரை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து இருப்பவர் நடிகர் ஸ்ரீ. பிரபலமான இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷின் மகனான இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் இந்த திரைத்துறையில் சந்தித்த அவமானங்கள் குறித்து மிகவும் எமோஷனலாகி வருத்தத்துடன் பேசி இருந்தார்.
2001ம் ஒளிபரப்பான கீதாஞ்சலி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆனந்தம், கண்மணி, சிவசக்தி, இதயம், கனா காணும் காலங்கள், யாரடி நீ மோகினி உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பம்பரக்கண்ணாலே, ரங்கூன், சரோஜா தேவி, ஆர்.கே.நகர் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர்-1, மானாட மயிலாட உள்ளிட்ட ஏராளமான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார் நடிகர் ஸ்ரீ. தற்போது வானத்தைப்போல சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
'பாண்டவர் பூமி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஷமிதாவை 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் ஸ்ரீ கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் "எங்கப்பா வந்து தாஸ்புரம் ஸ்லம் ஏரியாவில் இருந்து வந்தவர். அவர் எஸ்.சி என்பதால் நானும் எஸ்.சி தான். சில நேரங்களில் மேல் ஜாதி என்பதால் நம்மை தாழ்த்தி பேசும்போது நான் சும்மா இருக்க மாட்டேன். அப்போ நான் தட்டி கேட்பேன், எல்லாரையும் சரிசமமா பாருங்க என நான் சொல்வேன். பிரச்சனை வரும். ஜாதி பிரச்சினை என்பது இப்பவும் இருக்கு ஆனால் முன்னாடி இருந்த அளவுக்கு இப்போ இல்லை”
”எனக்கு தமிழ் பேசும் போது ஒரு சில சமயங்களில் அந்த ஸ்லாங் வந்து விடும். ஒரு ப்ராஜெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அங்க இருந்தவங்க எல்லாரும் வேற ஜாதி. அப்போது ஒரு சீனியர் லேடி ஆர்ட்டிஸ்ட் அங்க இருந்தாங்க. ஏன் அவன் அப்படி பேசுறான்? இவன் அவனா? அப்படின்னு ஓபனாவே கேக்குறாங்க. அதுக்கு டைரக்டர் அவங்கக்கிட்ட சொல்லறாரு "ஆமா என்ன பண்றது... அதனால தான் இந்த கேரக்டருக்கு நடிக்க வைச்சேன் அப்படின்னு சொன்னாரு. அதை கேட்டு எனக்கு கடுப்பாயிடுச்சு. அப்போ நான் சண்டைக்கு போயிட்டேன். கேமராமேன் எனக்கு தெரிஞ்சவர் அதனால அவர் வந்து சமாதானம் செய்து வைச்சார்.
பணம் இல்லாததால என்னோட வாழ்க்கையில நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன். எங்க அப்பாவோட சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து ஒரு ஐந்து ஆறு வருஷம் கஷ்டப்பட்டேன். கார் டியூ கூட என்னால கட்டமுடியால. வண்டியை சீஸ் பண்ணிட்டு போய்டுவாங்கன்னு என்னோட ப்ரெண்ட் தொகுப்பாளர் விஜய் வீடு பின்னாடி வண்டியை ஒளிச்சு வைச்சு இருந்தேன். சில நேரத்தில் வண்டிக்கு பெட்ரோல் போட, பார்க்கிங் கொடுக்க கூட என்கிட்ட காசு இருக்காது" என மிகவும் எமோஷனலாக பேசி இருந்தார்