Sharwanand Accident: 6 நாளில் திருமணம்.. விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்தில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
ஐதராபாத்தில் உள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தெலுங்கு நடிகர் சர்வானந்த், தனது ரேஞ்ச் ரோவர் காரில் நேற்று இரவு சென்றபோது சாலை நடுவே இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. பிலிம் நகர் சாலையில் அதிகாலை 2 மணியளவில் சென்றபோது நேர்ந்த இந்த விபத்தில், காரின் ஏர்பேக்குகள் வெளியானதால் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இருப்பினும் சுயநினைவுடன் அவரே காரில் இருந்த வெளியேறியதை அடுத்து, அருகிலிருந்தவர்கள் சர்வானந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வரும் ஜுன் மாதம் 3ம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சர்வானந்தின் காரை பறிமுதல் செய்துள்ளனர்.
சர்வானந்த் திருமணம்:
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான சர்வானந்திற்கு, கடந்த ஜனவரி மாதத்தில் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் நிச்சயம் நடைபெற்றது. அந்த பெண்ணின் தந்தை ஐதராபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இதனிடையே, தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா திட்டமிட்டுள்ளனர். இதற்காக , ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலஸை தேர்வு செய்துள்ளனர். 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த திருமணத்தில் மெஹந்தி, சங்கீத் மற்றும் ஹல்தி போன்ற நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், சர்வானந்த் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
திரையுலகில் சர்வானந்த்:
தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். தமிழை காட்டிலும் தெலுங்கிலேயே இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு ”ஐதோ தாரிக்கு” எனும் படத்தின் மூலம், தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். ரன் ராஜா ரன், மஹானுபாவடு, சதமானம்பவதே ஆகிய படங்கள் அவருக்கு வெறிப்படமாக அமைந்தது. அதோடு அண்மையில் வெளியான கணம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது. ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத தனது 35வது படத்தில் சர்வானந்த் நடித்து வருகிறார்.