Samantha: லவ்..லவ்..லவ்யூ... உற்சாகத்தில் துள்ளிக்குதித்த சமந்தா.. காரணம் 3 பெண்கள்!!
முன்னதாக, சமந்தா , நயன்தாரா இருவரும் ஒரே படத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் காரணம் என சமந்தா தெரிவித்திருந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா மற்றும் சமந்தா(Samantha) நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து நகைச்சுவை கலந்து வெளியாகியிருக்கும் இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரே படத்தில் இரண்டு முன்னணி நாயகிகளை நடிக்க வைப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. அதற்கு எந்த நாயகிகளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் சமந்தா , நயன்தாரா இருவரும் ஒரே படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியை ரசிக்க ஒரு கும்பல் வந்தால், நயன் மற்றும் சமந்தாவை ரசிக்க ஒரு பெரும்கூட்டம் தியேட்டர்கள் வந்தது. நயன் ரசிகர்கள், சமந்தா ரசிகர்கள் என சங்கம் வைத்து தியேட்டர்களை தெறிக்கவிட்டனர் ரசிகர்கள்.
நயனுக்கும், சமந்தாவுக்கும் ஆண் ரசிகர்கள் கூடி நிற்பது வழக்கம்தான் என்றாலும் தியேட்டர் வாசலில் சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாசத்தை பரிமாறிய 3 பெண்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அந்த பெண்களின் அன்பு சமந்தாவரை சென்றுள்ளது. அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா, ''இன்றைய நாளை இனிமையாக்கியுள்ள வீடியோ இது. உங்களையும் நான் நேசிக்கிறேன்’’எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் பெண்கள், நாங்கள் படத்துக்கு வந்ததே கதிஜாவுக்காகத்தான் (சமந்தார்). சமந்தாவுக்கு ஆண் ரசிகர்கள் இருப்பது வழக்கம்தான். ஆனால் பெண்களாகிய நாங்களே அவருக்காத்தான் படத்துக்காக வந்தோம். சமந்தாவுக்கு ஐ லவ் யூ என குதூகலமாக குரல் எழுப்புகின்றனர்.
View this post on Instagram
முன்னதாக, சமந்தா , நயன்தாரா இருவரும் ஒரே படத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் காரணம் என சமந்தா தெரிவித்திருந்தார். டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் “ காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என பேசி வருகிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை என்றால் சமந்தாவும் , நயன்தாராவும் நிச்சயமாக நடித்திருக்குமாட்டார்கள் “ என பதிவிட்டிருந்தார். இதனை ரீட்வீட் செய்த சமந்தா “உண்மைதான் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
விஜய் சேதுபதியும் நேர்காணல் ஒன்றில் சமந்தாவை கதிஜா கேரக்டரில் நடிக்க சம்மதிக்க வைத்ததே நான்தான் என தெரிவித்துள்ளார். நயன் தாரா, சமந்தா இருவருக்கும் இடையிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்தவொரு ஈகோவும் இருந்தது இல்லை. அவர்களை ஒன்றாக பார்க்கும் பொழுது அத்தனை அழகாக இருந்தது , கதாபாத்திரத்தில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் விக்னேஷ் சிவன் பார்த்துக்கொண்டார் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Aiiiiiiiiii this made my day ♥️♥️♥️
— Samantha (@Samanthaprabhu2) May 17, 2022
Love love loveeeeeee you tooooooooo🤗🤗 https://t.co/EWnuW4QcLK