மேலும் அறிய

Kavundampalayam OTT Release : ஓடிடிக்கு வந்த கெளடம்பாளையம்...படையெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்

Kavundampalayam OTT Release : நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று அக்டோபர் 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

கவுண்டம்பாளையம்

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தின் டிரைலர் வெளியானது முதலே படத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் சார்பாக எதிர்ப்பு கிளம்பியது. நாடகக்காதலை தோலுரிக்கிறேன் என்கிற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை தவறாக சித்தரிக்கும் விதமாக இப்படம் இருந்தது. ஓசிக தலைவர் , மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தான் நாடகக்காதல் செய்கிறார்கள் என படத்தில் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தும் பல கருத்துக்கள் இருந்தன. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு படத்தின் இயக்குநர் ரஞ்சித் சாமர்த்தியமாக பதில்களைச் சொல்லி நழுவிக் கொண்டார். 

திரையரங்கில் வெளியான கவுண்டம்பாளையம் திரைப்படம் அனைத்து தரப்பு ஆடியன்ஸாலும் பங்கமாக கலாய்க்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் மீம் கிரியேட்டர்ஸ் துவைத்து தொங்கவிட்டார்கள். ஜி பே இருக்கா என்று கேட்டால் “ என்கிட்ட சீப்பே இல்லை ஜி பே எப்படி இருக்கும் “ போன்ற படத்தின் வசனங்கள் ட்ரோல் மெட்டிரீயலாக மாறின.

கவுண்டம்பாளையம் ஓடிடி ரிலீஸ்

திரையரங்கில் இருந்து ஒரு சில நாட்களில் வெளியேறிய இப்படத்திற்கு ஓடிடி ரிலீஸ் கிடைக்காமல் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்து வரும் நிலையில் கவுண்டம்பாளையம் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை எல்லாம் ஓடிடியில் எப்படி வாங்கினார்கள் என்கிற கேள்வி ஒரு பக்கம் ரசிகர்களிடம் இருந்தாலும் இன்னொரு  தரப்பு ரசிகர்கள் படத்தை உடனே பார்க்க படையெடுத்து வருகிறார்கள். படத்தை பார்க்க செல்வது ஆர்வத்தினால் என்று நினைத்துவிட வேண்டாம். மீம்ஸ் போடுவதற்கு புதிதாக ஒரு கண்டெண்ட் சிக்கியிருக்கும் ஆர்வத்தில் அவர்கள் படத்தை பார்க்க செல்கிறார்கள். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Embed widget