மேலும் அறிய

Rajinikanth 169: வேற மாறி.. வேற மாறி.. ரஜினியுடன் கைகோக்கும் நெல்சன் திலீப் குமார்.. எகிறும் சினிமா கிராப்..!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பிங்க் வில்லா இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, “ நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இதுவும் வழக்கமான நகைச்சுவை நிறைந்த நெல்சன் படமாகவே இருக்கும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தொடங்கும். படம் வருகிற டிசம்பர் மாதம் அல்லது அடுத்து வருட ஜனவரி மாதம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது. 

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ரசிகர்கள்  “தலைவர்169” என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 வது படத்திற்காக இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170  படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

 

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது  விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். விறுவிறுப்பாக நடந்து வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜனவரி 1, புத்தாண்டு தினத்தையொட்டி கடந்த வருடம், டிசம்பர் 31-ம் தேதி பீஸ்ட் படத்தின் புதிய லுக் வெளியானது. அதில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி புத்தாண்டையொட்டி அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகுமெனவும் தகவல் வெளியானது. ஆனால் பாடல் வெளியாகவில்லை.

விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது. இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget