Sathya Sothanai Trailer: அலட்டல் இல்லாத பிரேம்ஜி.. சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.. சத்திய சோதனை படத்தின் ட்ரெய்லர் இதோ..!
நடிகர் பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘சத்தியசோதனை’ படத்தின் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘சத்தியசோதனை’ படத்தின் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த், ரவீனா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் ரிலீசான திரைப்படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. இந்த படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்றது இப்படம் சங்கையாவுக்கும் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் அவரின் அடுத்தப்படம் 5 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது.
இப்படத்தில் பிரேம்ஜி அமரன் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கே.ஜி.மோகன், லட்சுமி, ஹரிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி சத்திய சோதனை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
அதில் பொதுவுடைமை மற்றும் தனியுடைமை பற்றி பேசும் காட்சிகள் வரவேற்பை பெற்றது. அதேபோல் காவல்துறையில் சிக்கிய நபர் படும் அவஸ்தைகள் குறித்தும் கலகலப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் சத்திய சோதனை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் கண்மாயில் ஒரு கொலை நடப்பது போலவும், அதுதொடர்பான விசாரணையில் பிரேம்ஜி அமரன் மாட்டிக் கொள்வதும், அதன்பின்னால் நடைபெறும் காட்சிகள் என கலகலப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. அதேசமயம் தன்னுடைய படங்களில் மிகவும் அலப்பறையான நடிப்பை கொடுக்கும் பிரேம்ஜி இதில் அமைதியான, அழகான நடிப்பை வழங்கியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சத்திய சோதனை படத்திற்கு ரகுராம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சரணும், படத்தொகுப்பாளராக வெங்கட் ராஜெனும் பணியாற்றியுள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 21 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிக்னலில் நிற்காத விஜய்யின் கார்.. ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. மக்கள் இயக்கம் மீட்டிங்கின் முக்கிய நிகழ்வுகள்..!
‘ரஜினி, அஜித் ரசிகர்கள் சப்போர்ட் பண்றாங்க.. விஜய் முதல்வர் ஆவாரு.. நிர்வாகிகள் போடும் கோஷம்..