Actor Preetha: அம்மாவுக்கு இப்படி ஆகிடுச்சு.. வேண்டிக்கோங்க.. இன்ஸ்டா வீடியோவில் கதறி அழுத சீரியல் நடிகை..!
தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் சோகத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் ப்ரீத்தா.
சின்னத்திரை சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகை பிரீத்தா. 90களில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் தன்னுடன் பணியாற்றிய ராகவை திருமணம் செய்துகொண்டார். ராகவும் சிறந்த நடன கலைஞர். இருவரும் இணைந்து பல்வேறு சின்னத்திரை நடன ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இது போக இருவருமே சில திரைப்படங்களிலும் நடித்துள்ளனர். ராகவ் ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இவர்களுக்கு தனிஷா என்ற மகளும் உள்ளார்.இப்போது சீரியல் மற்றும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தாத நிலையில் தற்போது இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பது மூலமே ப்ரீத்தா ரசிகர்களுடன் டச்சில் உள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் சோகத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் ப்ரீத்தா.
View this post on Instagram
அதில் ''என் அம்மா தவறி கீழே விழுந்துவிட்டார். அவரால் பேசவும் முடியவில்லை, கை, கால்கள் செயலிழந்து இருக்கின்றன. அம்மாவுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதற்கு சிகிச்சை அளிக்கும் இந்த வேளையில் இப்போது நடந்த இந்த சம்பவம் மனவேதனையை தருகிறது. எனது அம்மாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவர் மீண்டும் குணமடைய வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
ப்ரீத்தாவின் இந்த வீடியோவுக்கு பலரும் ரியாக்ட் செய்துள்ளனர். ப்ரீத்தாவின் தாயார் விரைந்து குணமடைய வேண்டிக்கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளன. சிலர் தாயாருக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்ற ஐடியாவையும் குறிப்பிட்டு வருகின்றனர்