ஷங்கரின் Go Back படமா கேம் சேஞ்சர்? முதல் நாள் வசூல் இதோ

Published by: ABP NADU

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் நேற்று வெளியானது.

ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சமுத்திரக்கனி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

ஷங்கரின் கம் பேக் படமாக கேம் சேஞ்சர் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்தியன் 2 வில் விட்ட கமெர்ஷியல் வெற்றியை கேம் சேஞ்சரில் ஷங்கர் பிடித்துவிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் செய்த முதல்நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 186 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால் இப்படமும் ஷங்கருக்கு கைகொடுக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.