Vijayakanth: விடிய 3 மணி வரை சண்டை போட்ட விஜயகாந்த்.. காலையில் நடந்த அதிசயம்!
விஜயகாந்த் தனது வாழ்வில் செய்த உதவியை நடிகர் பொன்னம்பலம் கூறியதை என்னவென்று கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாகவும், கேப்டன் எனவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் திரையுலகின் பல உச்சநட்சத்திரங்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளவர் விஜயகாந்த். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் ஏராளமான சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
3 மணி வரை சண்டை:
விஜயகாந்த் செய்த உதவி குறித்து ஒரு முறை பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, பரதன்னு ஒரு படம். அந்த படம் நடிச்சுட்டு இருக்கோம். காலையில எனக்கு பணம் தேவை. கம்பெனியில கேட்டுகிட்டு இருக்கேன். காலையில எனக்கு கல்யாணம். விடிய காலை 3 மணி வரை ஷுட்டிங் போனுச்சு.

முடிஞ்ச உடனே நானும் ரொம்ப அசதி. அவரும் பயங்கர அசதி. இரண்டு பேரும் சண்டை போட்டு ரொம்ப அசதியாகிட்டோம். காலையில கல்யாணம். திங்கள்கிழமை 6 மணியில இருந்து 7.30 மணி வரை. நான் வீட்ல போயி குளிச்சுட்டு சரியா 7 மணிக்கு வரேன்.
கையில் இரண்டரை லட்சம்:
வந்து பாத்தா சரியா எனக்கு முன்னாடி அவரு உக்காந்து இருக்காரு. எனக்கு தூக்கி வாரி போட்ருச்சு. என்ன ஒரு நட்புக்கு ஒரு எல்லை இருக்கும். கொஞ்சம் இருக்கும் ஏதோ. காரணம் சொல்லுவாங்க, கொஞ்சம் லேட்டா வருவாங்க. ஆனால், அவர் வீட்டு கல்யாணம் மாதிரி வந்து முன்னாடி நின்னு எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிட்டு போகும்போது, எவ்வளவு செலவானாலும் கவலைப்படாத. மிச்சம் வாங்கித் தரேன். அப்படினு சொல்லிட்டு ஸ்பாட்லயே அப்படியே இரண்டரை லட்சம் ரூபாய் கையில கொடுத்துட்டு, அதாவது எப்படி சொல்றதுனா ஒரு விஷயத்தை சொல்லனும்னா ஒரு அடுக்கு ஏதாவது சொல்லலாம்.
இது அடுக்கவே முடியல. எடுத்த உடனே டாப்ல போயி நின்னுடுச்சு. எனக்கு அமைஞ்சது எல்லாம். என்னோட வாழ்க்கையில இந்த சினிமா அவரு எனக்கு மிகப்பெரிய மைல்கல். அவர் இல்லனா நான் இல்ல. அந்த மாதிரி.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்துடன் நெருக்கமான நட்பு:
நடிகர் விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து சண்டைக் காட்சிகளில் பொன்னம்பலம் நடித்துள்ளார். மேலும், பல படங்களில் இணைந்தும் நடித்துள்ளார். பொன்னம்பலம் 1988ம் ஆண்டு சண்டைக் கலைஞராக தனத திரை வாழ்வைத் தொடங்கினார்.

மாநகர காவல், பரதன், செந்தூரப் பாண்டி, ஆன்ஸ்ட் ராஜ், பெரிய மருது, தர்ம சக்கரம், தர்மா, வீரம் விளைஞ்ச மண்ணு, வல்லரசு, தவசி, தென்னவன், சொக்கத் தங்கம் என ஏராளமான படங்களில் விஜயகாந்துடன் இணைந்து பொன்னம்பலம் நடித்துள்ளார்.





















