மேலும் அறிய

Mammootty: ஹாரர் திரைப்படத்தில் மம்மூட்டி.. வெளியானது பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்..!

மம்மூட்டி நடித்து வரும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகி உள்ளது.

இன்று 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவர் நடித்து வரும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மம்மூட்டி

1971 ஆம் ஆண்டு வெளியான அனுபவன் பாலிச்சக்கல் என்கிறப் படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் மம்மூட்டி. திரைப்படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் இருந்தாலும் தனது குடும்பச் சூழல் காரணமாக திருமணம் செய்துகொண்டு வழக்கறிஞர் வேலையைத் தொடர்ந்து வந்தார். பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய விள்கனுண்டு ஸ்வப்னங்கள் என்கிறப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் அத்தனை முக்கியமான இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.

1980 களில் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தைப் பெற்றார் மம்மூட்டி. ஆனால் தனது ஸ்டார் அடையாளத்தை எந்த வகையிலும் தனது நடிப்பிற்கு தடையாக வர அவர் அனுமதிக்கவில்லை. ஒரே நேரத்தில் மிகப் பெரிய இயக்குநர்களுடனும் அதே நேரத்தில் அறிமுக இயக்குநர்களுடனும் வேலை செய்திருக்கிறார். கேரளாவில் கமர்ஷியல் சினிமா ஒரு புறமிருக்க மறுபக்கம் பேரலல் சினிமாக்களை இயக்கி வந்த அதூர் கோபாலகிருஷ்ணனின் படங்களில் விரும்பி நடித்தார். தனது கதாபாத்திரம் எவ்வளவு பெரிதா சின்னதா என்கிற கவலை அவருக்கு இருந்ததில்லை. நல்ல கதையை ஒருவர் படமாக்க நினைக்கிறார் என்றால் அதில் தனது பங்கு இருக்க வேண்டும் என்று எப்போது நினைத்தவர் மம்மூட்டி.

தமிழில் மம்மூட்டி

மெளனம் சம்மதம் என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் மம்மூட்டி. மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அவர் நடித்த தேவா கதாபாத்திரம் இனி ஒருவர் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு நிலைத்துவிட்டது. தொடர்ந்து மறுமலர்ச்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்டப் படங்களில் நடித்தார். சில காலம் தமிழ் சினிமாவில் தோன்றாத மம்மூட்டி ராம் இயக்கிய பேரன்பு படத்தின் மூலமாக ரீஎண்ட்ரி கொடுத்தார்.

 

விருதுகள்

கிட்டதட்ட 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூட்டி 3 முறை தேசிய விருதையும் 7 முறை கேரள மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டும் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்காக 8 ஆவது முறையாக மாநில விருதை வென்றார்.

பிரம்மயுகம்

அடுத்ததாக மலையாளத்தில் பூதகாலம் படத்தை இயக்கிய ராகும் சதாசிவன் இயக்கும் ஹாரர் திரைப்படமான பிரம்மயூகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப் பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான நைட் ஷிப்ட் நிறுவனம் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.


Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!

Jawan Release: இலவசமாக ஷாருக்கானின் ஜவான் படத்தை வெளியிடும் ரசிகர்கள்! செம்ம கடுப்பில் படக்குழு! இப்படியெல்லாம் பண்ணாதீங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget