வளர்ந்து வரும் ஸ்டார் என்று சொல்லாதீங்க...பிரதீப் ரங்கநாதன் பற்றி நடிகர் கவின் ஓப்பன் டாக்
பிரதீப் ரங்கநாதனை வளர்ந்து வரும் ஸ்டார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது அவர் ஏற்கனவே ஒரு ஸ்டார் தான் என நடிகர் கவின் பேசியுள்ளார்

பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பி.ஆர் நாயகனாக நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலித்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்த மிகப்பெரிய ஸ்டாராக அவர் உருவாவார் என பலர் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் சக நடிகரான கவின் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் பற்றி கவின்
பேட்டி ஒன்றில் பிரதிப் ரங்கநாதான பற்றி பேசிய கவின் " பிரதீப் ரங்கநாதனை ஒரு வளர்ந்து வரும் ஸ்டார் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் இயக்கி நடித்த முதல் படம் 100 கோடி வசூலித்தது. தொடர்ந்து இரண்டாவது படமும் 100 கோடி வசூல் செய்யும்போது அவர் ரசிகர்களிடம் படம் சென்று சேர்வதற்கான விஷயங்களை சரியாக செய்து வருகிறார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவை அவர் ஏற்கனவே பெரிய ஸ்டார் தான். 3 படங்கள் 100 கோடிகள் வசூலிப்பது என்பது வெறும் லக் இல்லை. அது முழுக்க முழுக்க திறமையும் திட்டமிடலும் தான் " என கவின் கூறியுள்ளார்
#Kavin About #Dude 100Crs club:
— AmuthaBharathi (@CinemaWithAB) November 5, 2025
"I don't see #PradeepRanganathan as EMERGING STAR, i see him as a STAR already🌟. It's not easy to get 100Crs for 3 Films. He plans the story & other factors perfectly, that's why it happens, it's not luck or something👌" pic.twitter.com/Ye0Iytqbzj
டியூட் ஓடிடி ரிலீஸ்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் டியூட். பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ , சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். டியூட் திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது





















