ரஷ்மிகா மந்தனா படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட தோற்றத்தில் அசத்தல்
ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பறந்து சென்று ஸ்வரோவ்ஸ்கி நடத்திய ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த ஆடம்பர நகை பிராண்ட் அதன் 130 ஆண்டு கால பாரம்பரியத்தை லைட்ஸ் கண்காட்சியின் மாஸ்டர்ஸ் மூலம் கொண்டாடியது.
நட்சத்திர பட்டாளத்துடன் கூடிய இந்த நிகழ்வில் கைலி ஜென்னர், செர், லா ரோச், வீனஸ் வில்லியம்ஸ், ப்ளூ போங்டிவத் டாங்வான்ச்சரோன் மற்றும் லாரா ஹேரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், ரேஷ்மிகா தனது கண்கவர் தோற்றத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சிவப்பு கம்பளத்தில் ஒரு அற்புதமான இரட்டை வண்ண ஆடையுடன் தோன்றினார், அதில் உலோக வெள்ளி நிற கோர்செட் மற்றும் நேர்த்தியான கருப்பு நிற ஸ்கர்ட் ஆகியவை இருந்தன.
தமிழ் , தெலுங்கி , இந்தி , கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது
குடும்பத்துடன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இது குறித்து இரு நடிகர்களும் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை
ஆனால் இருவரது புகைப்படங்களிலும் அவர்கள் நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொண்ட மோதிரங்களை நாம் காணலாம்
கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார்கள்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது
திருமண சலசலப்பிற்கு மத்தியில் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அண்மையில் இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் அவர் நடித்த தம்மா திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது