மேலும் அறிய

Vaa Vaathiyaar: அதிமுகவுக்காக ஒரு படம்.. வந்தாச்சு “வா வாத்தியார்” ஸ்னீக்பீக் வீடியோ!

வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் மறைந்த நாளான டிசம்பர்  24ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு, கார்த்தி பிறப்பது போன்ற காட்சி இருக்கிறது.

நடிகர் கார்த்தி நடித்திருக்கும் “வா வாத்தியார்” படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

எதிர்பார்ப்பில் “வா வாத்தியார்”

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படத்துக்குப் பின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் படம் “வா வாத்தியார்”. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஆனந்தராஜ், வடிவுக்கரசி, பி.எல்.தேனப்பன், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜிஎம் சுந்தர் என ஏகப்பட்ட பேர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 14) போகி பண்டிகை அன்று தியேட்டரில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் “வா வாத்தியார்” படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் எம்ஜிஆர் மறைந்த நாளான டிசம்பர்  24ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு, ராஜ்கிரண் பேரனான கார்த்தி பிறப்பது போன்றும், தீவிர எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் “வாத்தியார் பிறந்திருக்கிறார்” என சொல்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

அதேபோல் எம்ஜிஆர் உள்ளங்காலில் இருக்கும் மச்சம், என் பேரன் காலிலும் இருப்பதாக அவர் நெகிழ்கிறார். மேலும் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை நேரில் காண முடியவில்லை. அதனால் எம்ஜிஆர் ரசிகர்களான தங்களுக்கு குடியிருந்த கோயில் படத்தை போட்டு காட்டுமாறு ராஜ்கிரண் கூறுகிறார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிறுத்தப்படுகிறது. என்னவென்று ஆபரேட்டரிடம் போய் கேட்கும்போது முதலமைச்சரான எம்ஜிஆர் காலமானதாக சொல்லப்படுகிறது. 

இதனால் படம் பார்க்க வந்த எம்ஜிஆர் ரசிகர்கள் கதறி அழுகின்றனர். அந்த தியேட்டர் வாசலில் துக்கம் கடைபிடிக்கும் காட்சிகளும் உள்ளது. மேலும் வா வாத்தியார் என்ற டைட்டிலும் விதவிதமான எழுத்துகளில் காட்டப்படுகிறது. இதனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என கார்த்தி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.  

இதனைப் பார்த்த ரசிகர்கள் எப்படி பராசக்தி படம் திமுகவுக்கு எடுக்கப்பட்டதோ, அதேபோல் அதிமுகவினரை கவர வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சிலாகித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் எப்படியாவது பிரச்னை இல்லாமல் படத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Embed widget