Actor Jai | மீண்டும் கார் ரேஸ்.. ட்ராக்கில் கால்பதித்த ஜெய்.. எகிடுதகிடு லுக்!
3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் நடிகர் ஜெய் களமிறங்க உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெய் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.
மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண்.6. இந்த ரேஸ் பந்தய போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கியது. தகுதி சுற்று நேற்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ரேஸ் பந்தயம் இன்று நடைபெறுகிறது.
வழக்கமாக, இந்தியா முழுவதும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று தடங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும்.
படிக்க:
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
இந்த ஆண்டு, போட்டி சென்னை மைதானத்தில் (MMRT - Madras Motor Racing Track) நடக்க இருக்கிறது. இந்த நிலையில்தான் நடிகர் ஜெய் 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார்.
இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது. முன்னதாக, அவருக்கு வருண் மணியன் Radiance Reality நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்த நிலையில் தற்போது எண்ணித்துணிக படக்குழு ஸ்பான்சர் செய்ய முன் வந்திருக்கிறது.
முன்னதாக, சுசீந்திரன் இயக்கும் ஜெய்யின் 30 வது படத்தில் ஜெய் இசையமைப்பளாராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!