செல்ஃபீ எடுத்தபோது ரஜினி காதில் சொன்ன வார்த்தை...துள்ளி குதித்த ஆர்.ஜே பாலாஜி
நடிகர் ரஜினிகாந்துடன் செல்ஃபீ எடுத்துக் கொண்ட தருணத்தைப் பற்றி நடிகர் இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துகொண்டுள்ளார்

ஆர்.ஜே பாலாஜி
ரேடியோவில் ஆர் ஜேவாக தனது பயணத்தை தொடங்கி தற்போது சூர்யா 45 படத்தை இயக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. சினிமாவில் நகைச்சுவை நடிகராக நல்ல வரவேற்பு இருந்தாலும் அவர் அதோடு நிற்காமல் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்னதாக எல்.கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் என இரு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த இரண்டும் காமெடி என்டர்டெயினர் படங்கள். முதல் முறையாக மாஸான ஒரு என்டர்டெயினர் படத்த அவர் எப்படி கையாளப்போகிறார் என்பதை பார்த்த ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். மேலும் சூர்யா 45 படத்திலும் வில்லனாக ஆர்.ஜே பாலாஜி நடித்தும் வருகிறார்.
ரஜினியுடன் செல்ஃபீ எடுத்த தருணம்
சிறு வயதிலேயே தந்தையை இழந்தது. இளம் வயதில் திருமணம் , ஆர்.ஜே வாழ்க்கையில் தொடங்கி இயக்குநர் என பல சுவாரஸ்யமான பக்கங்களைக் கொண்டது பாலாஜியின் வாழ்க்கை. இதில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ரஜினியுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்ட தருணத்தை ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துகொண்டுள்ளார்.
" ரஜினி சாருடன் ஒரு ஃபோட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் நான் அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் போது அவருக்கு நான் யார் என்று தெரிந்திருக்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது மேடையில் ரஜினி , விஜய், கமல் எல்லாரும் சேர்ந்து நின்றார்கள். அப்போது உடனே ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள சொல்லி எனக்கு பின்னால் இருந்து சொன்னார்கள். நானும் சார் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டேன். நான் யாரென்று தெரிந்தால் தான் அவருடன் ஃபோட்டொ எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்கிற கவலையில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள போனேன். அப்போது பின்னால் இருந்து ரஜினி ' பாலாஜி ரொம்ப சூப்பரா பேசுறீங்க" என்று சொன்னதும் அவருக்கு என்னை தெரிந்திருக்கிறது என்று ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது' என ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்

