மேலும் அறிய

Kalaingar 100: மன்மதராஜா என என்னை அழைத்த கலைஞர்.. நூற்றாண்டு விழாவில் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்!

Actor Dhanush: “முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயாவின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை” - கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றதில், திரைத்துறையில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக கலைஞர் 100 விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த சமயத்தில் மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. அதனால் இந்த விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த விழாவானது நடைபெற்றது. 

கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகிற்கு முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஆற்றிய பெரும் தொண்டை கருத்தில் கொண்டு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், கார்த்தி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலைஞரின் அருமை பெருமைகளை பற்றி பேசி புகழாரம் சூட்டினார்கள்.

Kalaingar 100: மன்மதராஜா என என்னை அழைத்த கலைஞர்.. நூற்றாண்டு விழாவில் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்!

அந்த வகையில் நடிகர் தனுஷ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களின் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. அவரை நான் ஒரு படத்தின் பூஜையின்போது தான் சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து 'வாங்க மன்மதராஜா' என என்னை அழைத்தார். 

அவரின் மறைவை பற்றி பேசினால் தான் அவர் மறைந்து விட்டார் என்பதே நினைவுக்கு வருகிறது. அது வரையில் அவர் இருப்பதாக தான் நான் நினைக்கிறன். 

Kalaingar 100: மன்மதராஜா என என்னை அழைத்த கலைஞர்.. நூற்றாண்டு விழாவில் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்!

கலியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என சொன்னார் அதற்கு பிறகு கலைஞர் 'நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்'. நாமாக வாழ்ந்தால் தான் நலமாக வாழ முடியும் என்று சொன்னவர் கலைஞர். 

கலைஞரை போலவே நம்முடைய முதல்வரும் மிகவும் எளிமையானவராக, எந்நேரமும் அணுக கூடியவராக நம்மில் ஒருவராக இருப்பதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அசுரன் படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து வாழ்த்தினார். அப்போது அவர் என்னை பிரதர் என அழைத்தார். அவரின் அந்த எதார்த்தமான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தது” என பேசி இருந்தார் தனுஷ். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!

Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு

Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?

ABP Premium

வீடியோ

நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?...  ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’

Mesham New Year Rasi Palan: காதல் வெற்றி, பண யோகம்! 2025ல் கலக்கப்போகும் மேஷ ராசி - முழு பலனை பாருங்க

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

Fengal Cyclone: புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்; இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்- அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு

Embed widget