
Raayan: அமேசான் ப்ரைம் ஓடிடியில் வருகிறான் தனுஷின் ராயன்! என்னைக்கு ரிலீஸ் தெரியுமா?
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் என்ன தேதியில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராயன். இந்த படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. தனுஷே இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராயன் ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில், ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ராயன் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியான ராயன் திரைப்படம் ஓடிடியில் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் வெளியாகிறது.
பவர் பாண்டி என்ற காதல் கதையை இயக்கிய தனுஷ், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக ராயனை இயக்கியிருப்பார். இந்த படத்தில் தனுஷின் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
Raayan has a PURPOSE to fulfill and JUSTICE to seek ⚖️🔥#RaayanOnPrime, Aug 23@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan pic.twitter.com/1I3mqFw0GR
— prime video IN (@PrimeVideoIN) August 16, 2024
வசூலை குவித்த ராயன்:
தனுஷ் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, செல்வ ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற ராயன் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்த ராயன் படம் அண்ணன் – தம்பி – தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ராயன் படம் இரண்டாம் பாகத்திற்கான அறிகுறிகளுடனே ராயன் படம் முடிக்கப்பட்டிருக்கும்.
தனுஷ் தற்போது தனது அடுத்தடுத்த படங்களுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள தனுஷ் தமிழிலும் அடுத்தடுத்து நடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

