மேலும் அறிய

Bommai: எஸ்.ஜே.சூர்யாவோடு நடிக்க பயந்தேன்.. ஷூட்டிங்கில் நடந்ததை போட்டுடைத்த நடிகை சாந்தினி..!

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவோடு நடிக்க பயந்ததாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை சாந்தனி தெரிவித்துள்ளார். 

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவோடு நடிக்க பயந்ததாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில்  நடிகை சாந்தனி தெரிவித்துள்ளார். 

அழகியே தீயே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராதா மோகன். யதார்தமான காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த அவர் பொன்னியின் செல்வன், மொழி, அபியும், நானும், பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘பொம்மை’ படம் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. 

இதனிடையே பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகை பிரியா பவானி ஷங்கர், “பொம்மை படம் நான் ஆசைப்பட்டு பண்ணிய படம். ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம். ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது. இது 200% ராதாமோகனின் படம். அதற்கு மேல எதுவும் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் வைக்கும் வலிமையே அவரது திறமையை சொல்லி விடும். அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம்.

அதேபோல் எஸ்.ஜே.சூர்யாவோடு இது எனக்கு 2வது படம். முந்தைய படத்துல அவர் ஹீரோ மட்டும் தான். பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் நெருப்பு மாதிரி இருப்பார். அவர் நடிக்கிறதைப் பார்ப்பதே தனி அனுபவம் தான். 20,30 டேக் எடுத்தாலும் எனர்ஜி குறையாமல் விதவிதமாக நடித்துக் கொடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அதை பார்க்க விளையாட்டாக தோன்றினாலும் ஸ்கிரீனில் பார்க்கும்போது அவரது உழைப்பு தெரிகிறது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகை சாந்தினி, இந்த படம் எனக்கு மிகவும் நினைவுக்கூரத்தக்க படமாக அமைந்துள்ளது. நான் ரொம்ப என்ஜாய் பண்ண கேரக்டர். முதல்முறையாக ராதாமோகன் அலுவலகத்தில் இருந்து போன் வந்த போது ரொம்ப ஆர்வமாக இருந்தது. இந்த படத்தில் என்னுடைய எதார்த்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்த உதவினார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை நான். எல்லோரையும் சமமாக மதிப்பார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மற்ற படங்களுக்கும் சப்போர்ட் செய்தார். ஷூட்டிங்கில் ஒருநாள் பயங்கரமாக கத்திக் கொண்டு இருந்தார். நான் நடிக்க பயந்தேன். ஆனால் காட்சியில் நடிக்க வந்தபோது ரொம்ப கூலாக நடித்தார். அவரின் அர்ப்பணிப்பை கண்டு நான் வியந்தேன்.  

மேலும் படிக்க: S.J.Suryah: 'சம்பாதித்த பணத்தையெல்லாம் சினிமாவிலேயே இழந்தேன்’ .. வேதனையுடன் பேசிய எஸ்.ஜே.சூர்யா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget