மேலும் அறிய

பொதுவெளியில் நான் அதிகம் வாய் திறக்காததற்கு காரணம் இதுதான்: அருள்நிதி

நான் பேசுனா ரொம்ப ஓப்பனா பேசிருவேன் அதனால் தான் பொது இடங்களில் நான் அதிகம் வாய் திறப்பதில்லை என்று அருள்நிதி   கலகல பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். 

நான் பேசுனா ரொம்ப ஓப்பனா பேசிருவேன் அதனால் தான் பொது இடங்களில் நான் அதிகம் வாய் திறப்பதில்லை என்று அருள்நிதி   கலகல பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். 

அரசியல் மற்றும் திரையுலக பின்னணி கொண்ட நடிகர் அருள்நிதி. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி  மூன்றவாது மகனின் வாரிசு. என்னதான் ஸ்ட்ராங்கான பின்னணி கொண்டவராக இருந்தாலும்  அலப்பரை இல்லாமல் எல்லோருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள் . அருள்நிதி வம்சம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் . அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட , மௌனகுரு, டிமாண்டி காலனி, நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் , இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இவர் நடிப்பில் லேட்டஸ்ட் ரிலீஸ் டைரி. உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" 2022ல் பல வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அருள்நிதியின் டைரி படத்தினையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் விழா நடந்தபோது மேடையில் அருள்நிதி பேசியதுதான் தற்போது மீண்டும் உலாவரத் தொடங்கியுள்ளது. “உண்மையில் வம்சம் படம் அண்ணனுக்கு வந்தது தான். அவர்தான் இல்லை இந்த கேரக்டருக்கு நான் செட்டாக மாட்டேன் என் தம்பி அருள்நிதியை வைத்துப் பண்ணுங்கள் என்று சொல்லி என்னை இயக்குநர் பாண்டிராஜுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் தாத்தா தான் செய்தார். அந்த விழாவில் மொத்த குடும்பமும் இருந்தது. ஆனால் அண்ணன் உதய் மட்டும் இல்லை. எனக்கு ரொம்பவே அழுகையா வந்தது. ஆனால் அவர்தான் என்னை வளர்த்துவிட்டார். இன்னைக்கு நான் அவர் உள்பட பல பிரபலங்கள் இருக்கும் மேடையில் என் பட அறிமுகத்துக்காக நிற்பதில் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அப்படியே தொகுப்பாளினியாக நின்று கொண்டிருந்த டிடியைப் பார்த்து ஹேப்பியா என்று கேட்டார். அதற்கு டிடியும் நான் ஹேப்பி. ஆனா நீங்க பேசினதுல உங்க அண்ணன் தான் ரொம்ப ஹேப்பி. அவர் தான் பேசவைங்க பேசவைங்க என்று சொன்னார். நான் அவர்கிட்ட நானா சார் மாட்டேங்குறேன். அவர்தான் பேசமாட்டேங்குறார் என்றேன். இன்னிக்கு ஒருவழியா பேசிட்டீங்க என்றார்.

அதற்கு அருள்நிதி ”நான் பேச ஆரம்பிச்சா ரொம்ப ஓப்பனா பேசுவேன். அதான் பேசுறதே இல்லை” என்றார். அதற்கு டிடி அப்ப உடனே முடிச்சிடுவோம் என்று சொல்ல. அந்த உரையாடல் முடிந்தது.

View this post on Instagram
 
A post shared by Arulnithi tamilarasu (@arulnithi_tamilarasu)

;

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷாTrichy Siva: திருச்சி சிவாவுக்கு ஜாக்பார்ட்! ஸ்டாலின் அதிரடி Twist பொன்முடி எதிர்காலம் காலி?PonmudiEPS vs Amit shah | ”சிறைக்கு செல்ல தயார்” எடப்பாடி பழனிசாமி அதிரடி! ஷாக்கான அமித்ஷா! | BJP | ADMKPriyansh Arya Profile:  CSK - வை அலறவிட்ட இளைஞன்! பஞ்சாப்பின் Rocky Boy! யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
எம்ஜிஆர் ஆக துடிக்கும் விஜய்.. அதிமுக 2.0 தான் இலக்கு.. அப்போ தவெகவின் நிலை என்ன?
எம்ஜிஆர் ஆக துடிக்கும் விஜய்.. அதிமுக 2.0 தான் இலக்கு.. அப்போ தவெக நிலை என்ன?
அன்பு கட்டளை... தலைவரான முதல் நாளே நயினார் சொன்ன அந்த வார்த்தை.. செருப்பு போட்ட அண்ணாமலை 
அண்ணன் டா! தம்பி டா! தலைவரான நயினார் போட்ட முதல் கட்டளை.. செருப்பு போட்ட அண்ணாமலை
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...!  எங்கே தெரியுமா ?
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...! எங்கே தெரியுமா ?
Embed widget