‛ரஜினிக்கும் தாத்தாவாக நடிக்க தயார்...’ -நடிகர் ராஜ்கிரண் ஓப்பன் டாக்!
"”நான் ஆசைப்பட்டு விரும்பி , கலை சேவை செய்ய வேண்டுமென்றெல்லாம் சினிமாவுக்கு வந்தவன் அல்ல"
நல்லி எலும்பை சுக்கு நூறாக கடித்து, வேட்டியை மடித்துக்கட்டி ஹீரோவுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைத்து, எளிய மனிதனாக கிராமத்தானாக தன்னை சினிமாவில் அடையாளப்படுத்தியவர் ராஜ்கிரண். ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் சில கால இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் களமிறங்கினார்.இயக்குநர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட ராஜ்கிரண் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். தன்னுடைய கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்துக்கொள்ள சோஷியல் மீடியா ஒரு சிறந்த தளமாக இருப்பதாகவும் , மக்களை நேரடியாக சந்திக்க ஒரு வாய்ப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கும் ராஜ் கிரன். நேர்காணல் ஒன்றில் தான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் ”நான் ஆசைப்பட்டு விரும்பி , கலை சேவை செய்ய வேண்டுமென்றெல்லாம் சினிமாவுக்கு வந்தவன் அல்ல.நான் பஞ்சம் பிழைக்க சினிமாவுக்கு வந்தேன். ஊர்ல எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணிட்டு , சென்னைக்கு வந்தேன். அப்போ சினிமா கம்பெனியில வேலை கிடைத்தது.அப்படியே படிப்படியா முன்னேறி இப்படி வந்துட்டேன். அதனால எனக்கு இப்படி நடிக்கனும் அப்படினு நடிக்கனும்னு ஆசை இல்லை. இறைவன் என்னை ஒரு சூழல்ல வச்சுருக்கான். அதனால நான் சினிமா மூலமாக ஒரு மெசேஜ் சொல்லனும்னு ஆசைப்பட்டுதான் , கதைகள்ல ஓகே சொல்லுவேன். நிறைய பேர் என்னை படத்துக்கு புக் பண்ண வற்றதுக்கு கூட பயப்படுவாங்க.நான் கதை பிடிக்கலைனா அடிச்சுடுவேன். திட்டுவேன்னு சொல்லுவாங்க. நான் பெரிய கோவக்காரன்னு ஒரு பிம்பம் வெளியில இருக்கு. அதெல்லாம் பொய் வதந்தி.சினிமாவுல மேனேஜர் வச்சுக்காத , பி.எ வச்சுக்காத ஒரே ஆள் நான்தான். என்னை யார் வேண்டுமானாலும் தொடர்புக்கொள்ளலாம். கால் பண்ணுறதுக்கு முன்னால ஒரு மெசேஜ் பண்ணா போதும். நான் ஹீரோவா நடிச்சுட்டு இருந்தேன் . என்னை சப்போர்டிங் கேரக்டர்ல நடிக்க வச்சவரு இயக்குநர் பாலா. நந்தா படத்துல என்னுடைய கேரக்டர் சிவாஜி சாருக்கான கேரக்டர். அவர்தான் பண்ண வேண்டியது. ஆனால் கடற்கரை பக்கத்துல ஷூட்டிங் பண்ணனும்ங்குறதால வேண்டாம்னு பிரபு தம்பி சொல்லிட்டாங்க. அதனால நான் பண்ணேன். எனக்கு போட்டினு யாரும் இல்லை.யாருக்குமே யாரும் போட்டியில்லை. அவங்க அவங்களுக்கு தனித்தனி சிறப்பு தன்மை இருக்கு.நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணமாட்டேன். காரணம் அதுக்கு நடிப்பு திறமை வேணும்.நான் சராசரி மனிதன்.மஞ்சப்பை படத்துல என்னை தாத்தா கேரக்டருக்காக அனுகும் பொழுது முதல்ல தயங்குனாங்க. நான் நான் ரஜினி சாருக்கு கூட தாத்தாவா நடிப்பேன்..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நமக்கு தேவை மக்களுக்கு நாம என்ன சோல்லப்போறோம் என்பதுதான்.” என மனம் திறந்து பேசியிருக்கிறார் ராஜ்கிரண்.