Ajith Kumar: தூங்கி எழுந்தால் உயிருடன் இருப்போமான்னு தெரியாது ; சினிமா ஓய்வு குறித்து அஜித் சொன்னது என்ன?
சினிமாவிற்கு வர வேண்டும் என்று நான நினைத்து பார்க்க வில்லை என்று அஜித் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொன்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார், நேற்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும், திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமீப காலமாக அஜித் படத்தை முடித்துவிட்டால்... கார் ரேஸ் , பைக் டூர் என அதிகம் வெளியே வரத்துவங்கிவிட்டதால், இவரது ரசிகர்கள் அவரை பல சமயங்களில் வெளியே சந்திக்க நேர்கிறது.
கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த அஜித்... கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே போட்டியை தனது குடும்பத்தோடு கண்டு ரசித்தார். அதன் பிறகு டெல்லியில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்ம பூஷண் விருதை பெற்றார்.

இந்த நிலையில்தான் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அஜித் மனம் திறந்து பேசியிருக்கிறார். 'அதாவது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்பது குறித்து யாராலயும் கணிக்க முடியாது. அப்படியிருக்கும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்று கூறியிருக்கிறார்.
சினிமா ஓய்வு பற்றி பேசியபோது... சினிமாவில் ஓய்வு பெறுவதை யாராலயும் திட்டமிட முடியாது. ஆனால், கண்டிப்பாக ஒருநாள் ஓய்வு என்பது உண்டு. எதையும் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாள்தோறும் தூங்கி எழுவதே ஒரு வரம் தான். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரும் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இவ்வளவு ஏன் எனக்கே பல காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது.

எனவே வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் தூங்கி எழுந்தால் உயிருடன் இருப்போமா என்பதே தெரியாது. சினிமாவிற்கு வர வேண்டும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. படிப்பை முடித்து ஆட்டோமொபைல் நிறுவனத்தில் தான் ஒரு 6 மாதம் வேலை செய்தேன். அப்போது தான் 18 வயதில் பைக் ரேஸில் ஈடுபட தொடங்கினேன். அதன் பிறகு அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தேன் என்று சினிமா வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அஜித் பேசியிருக்கிறார்.





















