Aamir Khan: சமூக பிரச்னையை விட மக்களை மகிழ்விப்பதே முக்கியம்.. சினிமா பற்றி அமீர்கான் பேச்சு
மும்பையில் ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூகப் பிரச்சினைகளை எழுப்புவதை விட மக்களை மகிழ்விப்பதே சினிமாவின் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும் என நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், “Telling Laapataa Tales: Scenes from an Invisible Nation” என்ற தலைப்பில் நடந்த உரையாடலில் நடிகர் அமீர்கான் பங்கேற்றார். அப்போது பேசிய அமீர்கானிடம் அவரது கடைசிப் படமான லால் சிங் தத்தாவின் தோல்வி மற்றும் அது அவருக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு, “அந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அத்வைத், கரீனா உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் குழுவினர் கடுமையாக உழைத்தனர், அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சமூகப் பிரச்சினைகளை எழுப்புவதை விட மக்களை மகிழ்விப்பதே சினிமாவின் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நீண்ட நாட்களுக்குப் பின் என்னுடைய படம் ஓடாததால் குடும்பத்தாரும், நண்பர்களும் என்னிடம் வந்து நான் நன்றாக இருக்கிறேனா? என விசாரித்தார்கள். ஒரு தோல்விக்குப் பிறகு நிறைய அன்பு கிடைப்பதை நான் உணர்ந்தேன். இது எனக்குத் தெரிந்திருந்தால், நான் முன்பே ஒன்று அல்லது இரண்டு தோல்விகளை கொடுத்திருப்பேன்.
চিত্রনাট্য এসেছিল আমির খানের কাছে, কিন্তু কেন তিনি চেয়েছিলেন কিরণ পরিচালনা করুক 'লাপতা লেডিজ়'?#AmirKhan #KiranRao #IdeasOfIndia pic.twitter.com/LXr6e5UpF7
— ABP Ananda (@abpanandatv) February 23, 2024
ஒரு தோல்வி உண்மையில் என்ன தவறு என்று உங்களுக்குக் கற்பிக்கிறது. அந்தக் கதையைத் தொடர்புகொள்வதில் உங்கள் தவறு என்ன என்பதைப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. லால் சிங் சத்தா படத்தில் நான் பல நிலைகளில் பல தவறுகளை செய்தேன். இவ்வளவு தவறுகளை ஒரே படத்தில் செய்துவிட்டேன். உணர்வு ரீதியில், படம் வேலை செய்யவில்லை என்று நான் வேதனைப்படுகிறேன். அதனை உணரவே அதிக நேரம் எடுத்துக்கொண்டேன், லால் சிங் சத்தா எனக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்தது.
சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு சினிமா ஒரு ஊடகமாக இருந்தாலும் மக்கள் பொழுதுபோக்கிற்காக தான் வருகிறார்கள். முதலில் உங்கள் கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். அதில் நீங்கள் நீங்கள் எதைத் தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பது வேறு விஷயம். ஒரு கதை என்னிடம் வந்தால், அது முதலில் என்னை மகிழ்விக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Raghava Lawrence: விபத்தில் ரசிகர் மரணம்.. வேதனையுடன் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு!