மேலும் அறிய

Raghava Lawrence: விபத்தில் ரசிகர் மரணம்.. வேதனையுடன் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு!

நடனக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ராகவா லாரன்ஸ் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடத்தில் பிரபலமாக தொடங்கினார்.

ரசிகர்களை சந்திக்க இனிமேல் தானே வருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

நடனக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ராகவா லாரன்ஸ் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடத்தில் பிரபலமாக தொடங்கினார். தொடர்ந்து தமிழில் உன்னைக் கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அற்புதம், தென்றல் என சில படங்களில் நடித்த லாரன்ஸூக்கு 2007 ஆம் ஆண்டு வந்த முனி படம் திருப்புமுனையாக அமைந்தது. 

தெலுங்கில் மாஸ், ஸ்டைல், ரபேல், டான் உள்ளிட்ட படங்களையும், முனி,காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சானா 3 ஆகிய படங்களை தமிழிலும், லட்சுமி என்ற இந்தி படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். கடைசியாக சந்திமுகி 2, ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். இதில் ஜிகர்தண்டா படம் சூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து துர்கா, அதிகாரம், புல்லட் உள்ளிட்ட படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். 

அதேசமயம் நடிகர் விஜயகாந்த் மறைந்த நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். அதில் விஜயகாந்த் மகன் நடிக்கும் படத்தில் எந்த வித கேரக்டர் கொடுத்தாலும் நடித்துக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.  இதனிடையே ரசிகர்களை சந்தித்து அவ்வப்போது புகைப்படம் எடுக்கும் மற்றும் உரையாடும் நிகழ்வை நடத்தும் லாரன்ஸ் தற்போது அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளார். 

அதில், “வணக்கம் நண்பர்களே ரசிகர்களே, கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டார். மிகவும் மனவேதனையாக இருந்தது. அன்று, என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன், ஆனால் நான் அவர்களுக்காக பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்துவேன். நாளை முதல் தொடங்குகிறேன், முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் உள்ளது. நாளை சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க: Director Atlee: ஜவான் படத்தை விட பெரிய சம்பவம் இருக்கு - இயக்குநர் அட்லீ கொடுத்த அப்டேட்

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget