வெற்றிக்காக காத்திருக்கும் "ஆதார்" படக்குழுவினர்.. செப்டம்பர் 22 ரிலீஸ்
Aadhaar releases shortly: "ஆதார்" திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக திரையிடப்படும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
Aadhaar Movie release date announced: ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் "ஆதார்" படக்குழுவினர்...செப்டம்பர் 22 ரிலீஸ்
வெண்ணிலா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஆதார்'. இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், தீலீபன், பிரபாகர், இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சாதாரணமான மனிதரின் வலியை பற்றி எதார்த்தமாக பேசும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார்.
எளிமையான யதார்த்தமான கதை :
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் வெளியிட்டார். படத்தின் டீசர், சிங்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு யதார்த்தமான கதை என்பதால் நிச்சயம் கடைக்கோடி ரசிகர்கள் வரை இப்படம் போய் சேரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் படக்குழுவினர்.
Our film has been officially selected at the Tatra International Film Festival!!🎬
— ramnath palanikumar (@ramnathpalani) August 8, 2022
@karunaasethu,@iarunpandianc@ActorDileepan @Riythvika @IamIneya @thesrikanthdeva #VennilaCreations @TSaseekumar @proyuvraaj #TatraFilmFestival #CinemakingFilmFestival pic.twitter.com/JDUVFWN8Up
மறுபடியும் இணைந்துள்ள வெற்றி கூட்டணி:
ராம்நாத் பழனிக்குமார் - நடிகர் கருணாஸ் இணைந்து பணிபுரியும் மூன்றாவது திரைப்படம் "ஆதார்". ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான வெற்றி படங்களான ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ தொடந்து இப்படமும் வெற்றி பெற்றால் அது அவர்கள் கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
சீரியஸ் கதை:
இதற்கு முன் வெளியான மற்ற இரண்டு படங்களும் ஒரு முழுமையான கமர்சியல் திரைப்படங்கள் ஆனால் இப்படம் மிகவும் வித்தியாசமான யதார்த்தமான சீரியஸ் கதை. இது நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு படமாக இருக்கும். இப்படத்தில் இனியா ஒரு நெகடிவ் ரோல் செய்கிறார். அவரின் சகோதரராக 'வத்திக்குச்சி' திலீபன் நடித்துள்ளார். கருணாஸ் மற்றும் ரித்விகா கட்டிட தொழிலாளிகளாக நடித்து இருக்கிறார்கள். அனைவரும் அவரவரின் பங்கை வெகு சிறப்பாக நடித்துள்ளார்கள்.
#AadhaarTamilMovie worldwide release in theatres on Sept 22nd #AadhaarFromSept22 @TSaseekumar @vennilacreatio @ramnathpalani @karunaasethu @Riythvika @IamIneya @iarunpandianc @meumariyaz @ActorDileepan@thesrikanthdeva @MMuthuswami@proyuvraaj @CtcMediaboy pic.twitter.com/POJc3pGWE3
— Rajasekar (@sekartweets) August 24, 2022
விரைவில் ரிலீஸ் :
"ஆதார்" திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக திரையிடப்படும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.