PS1 Tribute Song: வெயிட்டா வாடா ! தமிழா வாடா... பொன்னியின் செல்வன் படக்குழுவினரை பாராட்டும் ட்ரிப்யூட் வீடியோ
பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு நன்றி கூறும் வகையில் ட்ரிப்யூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை படமாக்கி சாதனை படைத்த இயக்குனர் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் ஒரு ட்ரிப்யூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
PS1 குழுவினருக்கு ட்ரிப்யூட் வீடியோ:
அமரர் கல்கியின் சரித்திர காவியமான "பொன்னியின் செல்வன்" நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளார் தென்னிந்திய சினிமாவின் ஐகான் இயக்குனர் மணிரத்தினம். 40 ஆண்டு கால கனவு பல தடங்கல்களையும் தாண்டி செப்டம்பர் 30ம் தேதி வெள்ளித்திரையில் உலகம் முழுவதும் ஒளிரப்போகுது. ஒரு தமிழனாக இதை நினைக்கும் போது மனம் கர்வப்படுகிறது. இதை சாதித்து காட்டிய இயக்குனர் மணிரத்தினம், அவரின் தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் மட்டுமின்றி இதை சாதித்து காட்ட உறுதுணையாய் இருந்த லைக்கா நிறுவனம் என அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் ஒரு ட்ரிப்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளனர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் குழுவினர்.
Streets of France witnessing the #PS1 🗡️ Trailer!✨#PonniyinSelvan1 🗡️ #PS1FromSep30 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions@tipsofficial @Tentkotta @NightEDFilms pic.twitter.com/D0BZerNMxm
— Lyca Productions (@LycaProductions) September 28, 2022
தமிழா வாடா :
"தமிழா வாடா" எனும் எழுச்சி மிக்க வீடியோ ஒன்றினை தயாரித்துள்ளனர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் குழுவினர். நம் தமிழனின் வரலாறு சொல்லும் இந்த பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வாடா தமிழா என்ற இந்த பாடல் வரிகள் படத்தின் தூண்களாய் இருந்த அனைவருக்கும் நன்றி பாராட்டும் விதமாக இப்பாடல் உருவாகியுள்ளது. இந்த உணர்ச்சிமிக்க பாடல் வரிகளை எழுதியவர் வைரபாரதி மாற்றி வள்ளி சீரன். எட்வின் லூயிஸ் விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலின் வரிகளுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள் எட்வின் லூயிஸ் மற்றும் ஆதித்யா ஆர்.கே. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதையை மிகவும் புதுசாக படமாக்கிய இந்த முயற்சியே ஒரு சாதனை தான். இந்த படம் தலைமுறையை கடந்தும் நம் வரலாறு பேசும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம் சோழர்களின் வரலாற்றை பற்றி இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பொன்னியின் செல்வன் காவியம் இரண்டு பாகங்களாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது. படக்குழுவினர் படத்தின் விளமப்ர பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ள சமயத்தில் படப்பிடிப்பின் போது இயக்குனர் மணிரத்னத்தின் ஈடுபாடு குறித்தும் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிந்துள்ளனர். இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே இந்த சரித்திர படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது.

