67th Filmfare Nominations : 67வது ஃபிலிம்பேர் விருதுகள் சவுத் 2022 விழா நாளை பெங்களூரில்... பைனல் லிஸ்ட் இதோ..
67வது ஃபிலிம்பேர் விருதுகள் சவுத் 2022 பிரமாண்டமான விழா பெங்களூரில் நாளை நடைபெற உள்ளது. பல பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
திரைத் துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருது ஃபிலிம்பேர் விருது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வழங்கப்படவுள்ளது. 67வது ஃபிலிம்பேர் விருதுகள் சவுத் 2022 பிரமாண்டமான விழா பெங்களூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் இணைவார்கள். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த நட்சத்திரங்கள் மற்றும் படங்கள் இந்த ஃபிலிம்பேர் விருது விழாவில் கௌரவிக்கப்படுவர். இந்த விருதுகளை முடிவு செய்யும் கமிட்டி தற்போது பல பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இதோ :
'ஜெய் பீம்' மற்றும் 'சூரரைப் போற்று' படங்களுக்காக சூர்யா, 'ஓ மை கடவுளே' படத்திற்காக அசோக் செல்வன், 'சார்பட்டா பரம்பரை' படத்திற்காக ஆர்யா, 'கர்ணன்' படத்திற்காக தனுஷ், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்காக துல்கர் சல்மான் மற்றும் 'ஜெய் பீம்' படத்திற்காக கே மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிச்சயமாக சூர்யா ஒரு ஒரு விருதினை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த நடிகைக்கான பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இதோ :
'ஜெய் பீம்' படத்திற்காக லிஜிமோல் ஜோஸ், 'க பே ரணசிங்கம்' படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ், 'சூரரைப் போற்று' படத்திற்காக அபர்ணா பாலமுரளி, 'சார்பட்டா பரம்பரை' படத்திற்காக துஷாரா விஜயன், 'பொன்மகள் வந்தாள்' மற்றும் 'உடன்பிறப்பே' படத்திற்காக ஜோதிகா ஆகியோர் ஃபைனல் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.
சிறந்த திரைப்படத்திற்கான பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இதோ :
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 2020 மற்றும் 2021 ல் வெளியாகின. அதில் 'ஜெய் பீம்', 'சூரரைப் போற்று', 'க பே ரணசிங்கம்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'கர்ணன்', 'மண்டேலா', மற்றும் 'சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பைனல் லிஸ்டில் இடம் பிடித்துள்ளன.
சிறந்த சப்போர்டிங் நடிகருக்கான பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இதோ :
சிறந்த சப்போர்டிங் நடிகருக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள் 'ஜெய் பீம்' படத்திற்கு பிரகாஷ் ராஜ், 'சூரரைப் போற்று' மற்றும் 'க பே ரணசிங்கம்' படத்திற்கு பரேஷ் நரவால், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்காக கௌதம் மேனன், 'வானம் கொட்டட்டும்' படத்திற்காக சரத்குமார், 'மாநாடு' படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா, 'உடன்பிறப்பு' படத்திற்காக சமுத்திரக்கனி மற்றும் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்காக பசுபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இதோ :
சிறந்த இசையமைப்பாளருக்கான நாமினேஷன் பட்டியலில் 'தர்பார்', 'டாக்டர்', 'மாஸ்டர்' ஆகிய மூன்று படங்களுக்காக அனிருத் ரவிச்சந்திரன், 'அண்ணாத்தே' படத்திற்காக டி. இமான்,'சூரரைப் போற்று' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் 'ஓ மை கடவுளே' படத்திற்காக லியோன் ஜேம்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற பல பிரிவுகளுக்கான விருதுகள் 67வது ஃபிலிம்பேர் விருதுகள் சவுத் 2022 விழாவில் நாளை வழங்கப்படவுள்ளது.