Ilayaraja song | உறங்கும் வேளையில்... ராஜாவின் 5 இனிமையான பாடல்கள்!
இரவு நேரத்தில் காதுகளுக்கு இனிமை தரக்கூடிய இளையராஜா பாடல்கள் என்னென்ன?
இசைஞானி இளையராஜாவின் இசை மகிழ்ச்சி, சோகம், துயரம், காதல் என அனைத்து வகையான நேரங்களில் கேட்கும் வகையில் இருக்கும். அப்படி இரவு நேரங்களிலும் ஒரு சில இளையாராஜா பாடல்களை கேட்டால் மனதிற்கு ஒருவித அமைதி கிடைக்கும். அத்துடன் நமது மனதிலுள்ள அழுத்தம் சற்று குறைந்து மனம் மிகவும் லேசாக மாறும். அப்படி இரவு நேரங்களில் கேட்க கூடிய டாப்-5 இளையராஜா பாடல்கள் என்னென்ன?
1. என் வானிலே ஒரே வெண்ணிலா:
ஜானி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜென்ஸி பாடிய சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலுக்கு இளையராஜாவின் இசை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
2. ஆகாய வெண்ணிலாவே:
இளையராஜா-யேசுதாஸ் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான பாடல் இது. அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். யேசுதாஸ் உடன் சேர்ந்து உமா ரமணன் பாடியிருப்பார். இரவு பொழுதை இனிமையாக்கும் ஒரு பாடலாக இது அமைந்திருக்கும்.
3. வானிலே தேனிலா:
காக்கிச்சட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்பிபி-ஜானகி பாடியிருப்பார்கள். இளையராஜாவின் இசையும் அவர்களின் குரலும் நமக்கு தேனை பருகுவது போல் அமைந்திருக்கும். அம்பிகா மற்றும் கமல்ஹாசன் சிறப்பாக இந்தப் பாடலில் நடித்திருப்பார்கள்.
4. நிலவு தூங்கும் நேரம்:
குங்குமச்சிமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்பிபி-ஜானகி பாடியிருப்பார்கள். மோகன் மற்றும் இளவரசி நடித்திருப்பார்கள். இந்தப் பாடலும் எஸ்பிபி-ஜானகி-இளையராஜா காம்போவில் சிறப்பான பாடல்களில் ஒன்று.
5. நிலாவே வா:
நிலா பாடல்களுக்கு பெயர் போன பாடும் நிலா எஸ்பிபி பாடிய நிலா பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் மௌன ராகம் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை மணிரத்னம் அழகாக காட்சி படுத்தியிருப்பார். இரவு நேரத்தில் இந்தப் பாடலின் இசை மனதற்கு அமைதியை தரும்.
இவை தவிர ஒரு சனம் தூங்கிருச்சு, காதலின் தீபம் ஒன்று, பூவே செம்பூவே, கண்ணே கலைமானே என இரவு நேர பாடல்களை அடுக்கி கொண்டே போகலாம். இவை அனைத்தும் இரவு நேரம் மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் கேட்கும் வகையில் இருக்கும். இரவு நேரத்தில் நமக்கு மன அமைதி தருவதால் இவை மேலும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த மாதிரியான் பாடல்களை இரவு நேரங்களில் கேட்பது மனதிற்கு நல்ல அமைதியை தருவதோடு நாம் சற்று நன்றாக தூங்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க: Nostalgia: 'லஜ்ஜாவதியே' பாட்டு ஞாபகம் இருக்கா? அப்ப இந்த பாடல்களின் லிஸ்ட் உங்களுக்குதான்!