Nostalgia: 'லஜ்ஜாவதியே' பாட்டு ஞாபகம் இருக்கா? அப்ப இந்த பாடல்களின் லிஸ்ட் உங்களுக்குதான்!
பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர்தான் 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் ஹீரோ. ஆனால், பரத்தின் முகம் அப்போது அவ்வளவு பரிச்சயமாக இருக்கவில்லை. ‘லஜ்ஜாவதியே’ பாடலால்தான் படத்துக்கே ப்ரொமோஷன். பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான பாடல்.
2004 – மியூசிக் சேனல்கள் அறிமுகமான ஆண்டு. தமிழில் 24 மணி நேர மியூசிக் சேனல் அறிமுகமானவுடன், பிடித்த பாடல்களை எல்லாம் வீடியோவாகவே பார்த்துவிடலாம் என அப்போதைய டீனேஜர்களுக்கு ஒரே குஷி. அதே ஆண்டு வெளியான புது படங்களின் பாடல்களை நாளொன்றுக்கு 10 முறையாவது டெலிகாஸ்ட் செய்து ‘டேப்’ தேய்த்துவிடுவார்கள் இந்த மியூசிக் சேனலில். அப்படி, ஹிட்டான ஒரு பாடல்தான் ‘லஜ்ஜாவதியே’. 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது.
பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர்தான் 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் ஹீரோ. ஆனால், பரத்தின் முகம் அப்போது அவ்வளவு பரிச்சயமாக இருக்கவில்லை. ‘லச்சாவதியே’ பாடலால்தான் படத்துக்கே ப்ரொமோஷன். பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான பாடல். எஃப்.எம்-களில் வெளியாகி ஆடியோ பயங்கர ஹிட், பிறகு விஷூவலாகவும் செம ஹிட். கேரள கடற்கரையில், படகில் ‘choreo’ செய்யப்பட்டிருக்கும் இந்த பாடலில் ஆங்காங்கே காட்டப்படும் கதக்களி நடனம்தான் பாடலின் ஹைலைட்.
சரி, “லஜ்ஜாவதியே ரீவைண்ட் இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கோம்னு” நீங்கள் கேட்பது புரிந்துவிட்டது. இந்த பாடல் இடம் பெற்றிருந்த படம், நாயகன், கதக்களி பொம்மை பற்றியெல்லாம் பேசிவிட்டோம், அப்படியே படத்தின் இசையமைப்பாளர் பற்றியும் ஒரு சின்ன ரீவைண்ட்.
படத்தின் இசையமைப்பாளர் ஜேஸி கிஃப்ட். தமிழில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கான படங்களுக்குத்தான் இவர் இசையமைத்திருக்கிறார். சில முன்னணி இசையமைப்பாளர்களுக்கு சில ஹிட் பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்களை கேட்டால், உங்களுக்கு இவரது குரல் நினைவுக்கு வரலாம். ஜேஸி கிஃப்ட் பாடிய சில பாடல்களின் லிஸ்ட் இதோ!
சண்டக்கோழி – கேட்டா கொடுக்குற பூமி இது
யுவன்சங்கர் ராஜா இசையில் வெளியான சண்டக்கோழி திரைப்படத்தில் வரும் இந்த திருவிழா பாடலை பாடியிருப்பார்.
மொழி – செவ்வானம் சேலைகட்டி சென்றது வீதியிலே
வித்தியாசாகர் இசையில் வெளியான மொழி திரைப்படத்தில் வெளியான இந்த சூப்பர் ஹிட் பாடலை பாடியது ஜேஸி கிஃப்ட்தான்.
வெயில் – வெயிலோடு விளையாடி வெளியோடு உறவாடி
ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியான வெயில் திரைப்படத்தின் டைட்டில் பாடலை, திப்பு, கைலாஷ் கேர், பிரசன்னா ஆகியோருடன் சேர்ந்து ஜேஸி கிஃப்ட்டும் இப்பாடலை பாடியிருப்பார்.
சச்சின் – குண்டு மாங்கா தோப்புக்குள்ள
தேவிஶ்ரீ பிரசாத் இசையில் வெளியான சச்சின் படத்தின் ஆல்பமே ஹிட். இதில், குண்டு மாங்கா தோப்புக்குள்ளே பாடலை பாடியிருப்பார்.
பேராண்மை – காட்டு புலி அடிச்சி காட்டு ராசா
மீண்டும் வித்தியாசாகர் இசையில் பேராண்மை படத்தில் கே.கேவுடன் இணைந்து இப்பாடலை பாடியிருப்பார். பாடல் யூட்யூப்பில் இல்லாததால் லிங்க் எம்பெட் செய்ய முடியவில்லை.
உனக்கும் எனக்கும் – கிளியே கிளியே
உனக்கும் எனக்கும் திரைப்படத்தில், நா. முத்துகுமார் வரிகளில் அமைந்த இந்த பாடலை, ஜேஸி பாடியிருப்பார்.
இப்படி, தமிழில் இவர் பாடிய பாடல்கள் நமக்கு பரிச்சயமானதாக இருந்தாலும் ஜேஸி கிஃப்ட் அவ்வளவு பரிச்சயமாகவில்லை. இவர் இசையமைத்த படங்களில், 4 ஸ்டூடண்ட்ஸ், பட்டாளம் ஆகிய இரண்டு படங்கள் மட்டும் இசை ஆல்பமாக ஹிட். மலையாளத்தில் மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு இவர் தொடர்ந்து இசையமைத்து வந்தாலும், தமிழில் அவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான ஜேஸி, தமிழில் இன்னும் நிறைய பாடல்களை பாடி, படங்களுக்கும் இசையமைப்பாரா என்று பார்ப்போம்.