மேலும் அறிய

Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்... நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?

Actor Sathyajith : பெரிய அளவில் வருவார் என எதிர்பார்த்தால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போன '16 வயதினிலே' டாக்டர் சத்யஜித் பற்றின ஒரு தொகுப்பு. 

தமிழ் சினிமாவை வேறு ஒரு கட்டத்திற்குள் நகர்த்தி சென்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரை இந்த தமிழ் சினிமாவுக்குள் அறிமுக படுத்திக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் '16 வயதினிலே'. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என மூவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்த ஒரு திரைப்படம். இப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு தூணாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. 

16 வயதினிலே படத்தில் ஒரு பிரதான கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தாலும் 46 ஆண்டுகளை கடந்த பின்பு இன்றும் நினைவில் இருக்கும் ஒரு கேரக்டர் தான் அதில் வரும் டாக்டர். அவர் ஸ்ரீதேவியை 'மயில்ல்ல்' என அழைப்பது இன்று வரை பிரபலம். அதன் ரீச் வேற லெவலில் இருந்தது.  அவர் தான் நடிகர் சத்யஜித். இவர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'நாம் பிறந்த மண்' படத்தின் மூலம் தான் முதன் முதலில் அறிமுகமானார்.  அதில் ஒரு துணை கதாபாத்திரமாக தலைகாட்டியிருப்பார். 

 

Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்... நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?


சிறு வயது முதலே கலை மீது இருந்த தீர்த்த காதலால் குடும்பத்தை எதிர்த்து ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பயிற்சி பெற்றார். நடிகர் சத்யஜித், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் 1977ம் ஆண்டுக்கான தங்க பதக்கம் பெற்றவர். அதற்காக அவரின் புகைப்படம் பத்திரிகையில் வந்ததை பார்த்துவிட்டு அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. மெலிந்த உருவமும், உயரமான தேகமும், அடர்த்தியான முடியும், பணக்கார தோற்றத்தில் இருந்த சத்யஜித் ஆடிஷனில் கலந்து கொண்டதும் அவர் தான் அந்த டாக்டர் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என பாரதிராஜா செலக்ட் செய்துள்ளார். நான் தான் டப்பிங் பேசுவேன் என அடம் பிடித்து அப்படத்தில் டப்பிங் செய்துள்ளார். தமிழ் தெரியாத வேற்று மொழிகாரர் எப்படி பேசுவரோ அதை போன்ற கொஞ்சு தமிழில் அவர் மயில்ல்ல்... என கொஞ்சியதும், நுனி நாக்கு ஆங்கிலமும் அவரை மிகவும் பிரபலமாகியது.  அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அவருக்கு ஏனோ அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

 

Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்... நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?

ஏழாவது மனிதன், பிக்பாக்கெட், அறுவடை நாள் உள்ளிட்ட ஒரு சில படங்களில் தலைகாட்டினார் சத்யஜித். தமிழில் குறைந்த அளவிலான அப்படங்களில் தான் வாய்ப்புகள் கிடைத்தாலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 
அதற்கு பிறகு பெரியளவில் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். 
 

கண்ணாடி, கோட் சூட் என இன்று வரை ஞாபகத்தில் இருந்து வருகிறார் சத்யஜித். அந்த படத்தில் பணிபுரிந்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர் என அனைவரும் நல்ல நிலையை அடைந்த நிலையில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சத்யஜித்திற்கு மட்டும் சரியான வாய்ப்புகளும் அங்கீகாரமும் அமையாதது பெரும் வருத்தம் தான். தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவருக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Embed widget