விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1 கோடி ரூபாய்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினரிடம் திருவண்ணாமலை எல்லையில் சிக்கியது 1 கோடி ரூபாய் பணம்.
விழுப்புரம்: திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக நிலத்தை விற்னை செய்து ஒரு கோடி ரூபாய் பணத்தை காரில் கொண்டு சென்ற மருத்துவரிடம் மழவந்தாங்கல் சோதனை சாவடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டினை சார்ந்த மதனகோபால் என்ற மருத்துவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இவரது தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான இடம் கோயம்புத்தூரில் இருந்ததை விற்பனை செய்து அதற்கான ரொக்க பணம் திருச்சியிலுள்ள தந்தை பழனியப்பனிடம் இருந்ததால் அந்த ரொக்க பணத்தை வாங்கி செல்வதற்காக மதனகோபால் சென்னையிலிருந்து திருச்சி சென்று பணத்தை வாங்கிகொண்டு மீண்டும் விழுப்புரம் வழியாக சென்னை செல்ல வந்துள்ளார்.
அப்போது விக்கிரவாண்டி இடைதேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும் விக்கிரவாண்டி வழியாக சென்றால் பணத்தை பறிமுதல் செய்வார்கள் என கருதி விழுப்புரத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை காரில் வைத்து கொண்டு கண்டாச்சிபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்று அவ்வழியாக சென்னை செல்லலாம் என மதன கோபால் நினைத்து சென்றபோது விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட எல்லைப்பகுதியான மழவந்தால்கள் சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்தபோது ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டறியபட்டது.
இதனையடுத்து சோதனை சாவடி போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரம் பணத்தை பறிமுதல் செய்தார்.
ஒரு கோடி ரூபாய் பணம் நிலம் விற்பனை செய்து எடுத்து செல்வதற்கான உரிய ஆவணத்தை காண்பித்துள்ளனர். இருந்த போதிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட தேர்தல் நடத்துல் அலுவலரான ஆட்சியர் பழனியிடம் ஒப்படைத்து விசாரனை செய்து வருகின்றனர்.