Urban Local Body Election | தனிநபர் அவதூறு பரப்புரைகளுக்கு போஸ்டர் அடிப்பதில்லை - அச்சக உரிமையாளர்கள் முடிவு
முக கவசம் அணிந்து வரும் வேட்பாளர்களுக்கு மட்டுமே துண்டு பிரசுரங்கள் அச்சடித்து தர சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் என்ற தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று தேர்தலில் போட்டியிட உள்ள இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் என்றாலே ஒரு காலத்தில் சுவர் விளம்பரங்கள், விளம்பர பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் என வேட்பாளர்கள் தங்கள் சின்னத்தையும், வாக்குறுதியை வெளிப்படுத்தும் விதமாக அச்சில் காட்சிப்படுத்தி விளம்பர படுத்தி வருவது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வேட்பாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்த துண்டுப்பிரசுரங்களை மட்டுமே பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Keerthi Suresh | நாயை கொடுமைப்படுத்தினாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சையை கிளப்பும் இன்ஸ்டா போட்டோ!
Railway | மத்திய பட்ஜெட்டில் மதுரை - போடி அகல ரயில் பாதை பணிக்கு ரூபாய் 125 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். பொருளாளர் பார்த்திபன், துணை செயலர்கள் தில்லை.நடராஜன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளர்களின் முழு விவரங்களை பெற்று துண்டுபிரசுரம் அச்சடித்து தருவது, தேர்தலில் போட்டியிடும் எதிர் வேட்பாளர்கள் குறித்து தனிநபர் விமர்சனம், அரசியல் காழ்புணர்ச்சி, பதற்றம் ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் போன்ற ஏதும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் அச்சடிப்பதில்லை, துண்டுபிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளர்கள் உடன் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அச்சடித்து தர ஆர்டர் பெறவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அச்சக உரிமையாளர்கள் சிவகுருநாதன், விஜி, ஞானவேல், உத்திரா, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அச்சகங்களில் துண்டு பிரசுரம் அச்சடிக்கப்படும் என்ற முடிவு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.