Railway | மத்திய பட்ஜெட்டில் மதுரை - போடி அகல ரயில் பாதை பணிக்கு ரூபாய் 125 கோடி ஒதுக்கீடு
மதுரை - போடிநாயக்கனுர் அகல ரயில்பாதை திட்டப் பணிக்கு ரூபாய் 125 கோடியும், புதிய நவீன பாம்பன் பாலப் பணிக்கு ரூபாய் 50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு ஏ.கே. அகர்வால் மற்றும் கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆகியோர் வியாழக்கிழமை அன்று இணையதள வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசினர். தெற்கு ரயில்வே பாதுகாப்பு பணிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட அதிக அளவாக ரூபாய் 2374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய் 1470 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 89.51 சதவீதம் அதிகமாகும் என்றனர்.
#Abpnadu | மத்திய பட்ஜெட்டில் மதுரை - போடி அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரூ 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு அகர்வால் மற்றும் கூடுதல் பொது மேலாளர் மல்லையா ஆகியோர் வியாழக்கிழமை அன்று இணையதள வாயிலாக சந்திப்பு
— Arunchinna (@iamarunchinna) February 4, 2022
@GMSRailway @pibchennai pic.twitter.com/a0whliuCJO